பரங்கிப்பேட்டை : தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் உட்கோட்டத்தில் உள்ள ரவுடிகள் மற்றும் பழைய குற்றவாளிகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். தேர்தலின்போது சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு பகுதியிலும் பழைய குற்றவாளிகள், ரவுடிகள் கணக்கெடுப்பதுடன், கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
அந்த வகையில் சிதம்பரம் உட்கோட்டத்திற்குட்பட்ட சிதம்பரம், சிதம்பரம் தாலுகா, அண்ணாமலைநகர், புவனகிரி, கிள்ளை, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment