பெங்காஸி, மார்ச் 13- அல்-ஜசீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் அலி ஹஸன் அல்-ஜாபர், லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அல்-ஜசீராவுக்கு சொந்தமான காரில் அவரும் மற்றும் சக செய்தியாளர்களும் சென்றபோது, பின்பக்கத்தில் இருந்து சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில், அலி ஹஸன் அல்-ஜாபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த மற்றொரு செய்தியாளருக்கும் குண்டு பாய்ந்தது.
படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதிபர் கடாபி ஆதரவு படையினர் தான் டி.வி. செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.ஏற்கெனவே, பிபிசி செய்தியாளர்கள் 3 பேரை கடாபி படையினர் தாக்கினர். மேலும், "கார்டியன்" பத்திரிகையில் பணிபுரியும் இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவரை கடாபி ஆதரவாளர்கள் பிடித்துச் சென்றுள்ளனர். அவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில், அல்-ஜசீரா செய்தியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது லிபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment