Islamic Widget

March 20, 2011

மதிமுக தேர்தல் புறக்கணிப்பு - அதிரடி முடிவு!

அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த மதிமுக நடைபெற உள்ள 2011 சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. நேற்று மாலையில் மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டமும் அதன்பின் மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெற்றது.
நேற்று மாலை தொடங்கி அதிகாலை 3 மணி வரை நடைபெற்ற கூட்டத்தில் தமிழத்திலும் புதுச் சேரியிலும் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப் பட்டு தீர்மானமும் நிறைவேற்றப் பட்டுள்ளது. தேர்தல் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சு வார்த்தையில அதிமுக தலைமை நடந்து கொண்ட விதம் மதிமுவினரின் உள்ளங்களை காயப் படுத்தியதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.ஜெயலலிதாவின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அகந்தை,ஆணவம், தன்னிச்சையாக முடிவு எடுக்கும் குணநலன் இன்னும் மாற வில்லை என்றும் இதன் காரணமாக அதிமுக கூட்டணியில் நீடிக்க விருப்பம் இல்லை என்றும் தேர்தலை புறக்கணிப்பது என்றும் முடிவு எடுக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சுயமரியாதையை இழந்து பதவிகளைப் பெறுவதில் மதிமுகவுக்கு விருப்பமில்லை என்றும் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டுள்ளது. பின்னர் இது குறித்துப் பேசிய மல்லை சத்யா 21 தொகுதிகள் கேட்ட நிலையில் 12 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று அதிமுக தலைமை கூறி வந்ததால் தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவெடுக்கப் பட்டது என்றும் அதிமுக நடந்து கொண்ட விதம் மதிமுகுக்கு பிடிக்க வில்லை என்றும் மூன்றாவது அணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவும் விருப்பமில்லை என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment