Islamic Widget

February 22, 2011

போடப்பட்ட 10 மாதத்தில் பல் இளித்த சிமென்ட் சாலை

சிதம்பரம் : சிதம்பரத்தில் போடப்பட்டு 10 மாதங்களே ஆன சிமென்ட் சாலை பெயர்ந்து பாழானது.சிதம்பரம் சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஜமால் நகர பள்ளி வாசல் தெருவில் 10 மாதங்களுக்கு முன்பு 200 மீட்டர் நீளத்திற்கு சிமென்ட் சாலை போடப்பட்டது.
இச்சாலை போடப்பட்டு இரண்டு மாதத்திலேயே சாலையின் ஒரு பகுதி பாழானது.அடுத்தடுத்து 10 மாதங்களில் சாலை முழுவதும் ஜல்லி பெயர்ந்து வீணாகி சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அவதிடைந்து வருகின்றனர்.எனவே தெருவில் மீண்டும் புதிய சிமென்ட் சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment