Islamic Widget

February 24, 2011

பரங்கிப்பேட்டை வழியாக பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

கிள்ளை:கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை மற்றும் புதுச்சத்திரம் வழியாக பிச்சாவரத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் புகழ்பெற்ற சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள வனப்பகுதிகளை ரசிக்கவும், கடலுக்கும் ஆற்றுகும் இடையில் உள்ள வனப்பகுதிகளை படகில் சென்று சுற்றிப் பார்க்கவும், உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக தமிழகத்தில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்ததால், சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டது.
சாலை வசதி சரியில்லாததால் கடந்த சில ஆண்டுகளாக சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து இயக்கிய அரசு பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பஸ்சுக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பரங்கிப்பேட்டை வெள்ளாற்றில் புதிய பாலம் கட்டப்பட்டதைத் தொடர்ந்து கடலூரில் இருந்து மூன்று டிரிப் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அதுவும் கடலூரில் இருந்து பிச்சாவரத்திற்கு 52 கி.மீ., தொலைவிற்கு கடற்கரையோரம் உள்ள கிராமங்கள் வழியாக சுற்றி வருகிறது. இதனால் கால விரயம் ஏற்படுகிறது. மேலும் சுற்றுலாத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் சென்னை, விழுப்புரம் பகுதியில் இருந்து இயக்கிய அரசு பஸ்களுடன், கடலூரில் இருந்து கூடுதலாக புதுச்சத்திரம் மற்றும் பரங்கிப்பேட்டை வழியாக பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அர”க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
Source: Dinamalar

No comments:

Post a Comment