வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கைதான 4 பேர், திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இரட்டைக் கொலை வழக்கில் கைதாகி கடலூர் சிறையில் இருக்கும் புதுவை ரெüடி வெள்ளை குணாவைக் கொலை செய்யத் திடமிட்டதாக, கடலூர் அருகே கூலிப்படையினர் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். கைதான புதுவை வாசு என்ற பழநிராஜ் (39), காஞ்சீபுரம் தேவராஜ் (29), கல்பாக்கம் விஜயகுமார் (22), திருவண்ணாமலை தாமோதரன் (24) ஆகிய 4 பேரிடம் இருந்தும் வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கி, வீச்சரிவாள்கள் கைப்பற்றப்பட்டன.
கைதானவர்கள் மீது ஏற்கெனவே பல கொலை வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளதாக போலீஸôர் தெரிவித்தனர். கைதான 4 பேரும் கடலூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சுதா உத்தரவிட்டார். இந்த கொலை முயற்சி வழக்கில் மேலும் 3 பேரை போலீஸôர் தேடிவருகிறார்கள்.
No comments:
Post a Comment