Islamic Widget

July 27, 2010

இடைமறித்து எதிரி ஏவுகணைகளை தாக்கும் இந்தி ஏவுகணைச் சோதனை வெற்றி


எதிரி ஏவுகணைகளை இடைமறித்து தாக்கக்கூடிய ஏவுகணையை இந்தியா திங்கள்கிழமை சோதித்துப்பார்த்தது. ஒரிசா கடற்கரை அருகே சாண்டிபூரில் கடற்பகுதியில் அமைக்கப்பட்ட ஏவுதளத்திலிருந்து இது ஏவி பார்க்கப்பட்டது.இந்த சோதனை வெற்றிகரமாக நடந்தது என்று ஏவுதள இயக்குநர் எஸ்.பி.தாஸ் தெரிவித்தார்.
எதிரி ஏவுகணையாக அனுப்பப்பட்ட ஏவுகணை 15 கிமீ உயரத்தில் சென்றபோது அதை இடை மறித்து தாக்கக்கூடிய ஏவுகணை பாய்ந்து தாக்கி அழித்தது.
முதலில் இலக்கு ஏவுகணையாக பிருத்வி ஏவுகணை காலை 10.05 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதை அடுத்து சில நிமிடத்தில் வீலர் தீவில் நிறுத்தப்பட்டிருந்த இடைமறித்து தாக்கும் ஏவுகணை அனுப்பப்பட்டது.
ரேடார்களிலிருந்து வரும் சமிக்ஞைகளை கொண்டு எதிரி ஏவுகணையை தேடி நடுக்கடலுக்கு மேல் இடைமறித்து அது தாக்கியது. இந்த சோதனை பற்றிய விவரம் திரட்டி மேலும் தீவிர ஆய்வு நடத்தப்படுகிறது என்று தாஸ் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment