கடலூர் கடற்கரைப் பகுதியில் காணப்படும் வனத்துறைக்குச் சொந்தமான காடு.துறைமுகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை, எனவே கடலூர் கடற்கரையில் உள்ள காடுகளை அழிக்க வேண்டும் என்று, கடலோரக் காவல் படை கோரிக்கை வைத்துள்ளது.
÷கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் வனத்துறைக்கும் தனியாருக்கும் சொந்தமான காடுகள் நிறைய உள்ளன. இவற்றில் தென்னை மரங்கள், சவுக்கு மரங்கள், பனை மரங்கள், முந்திரி மரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.
÷2004-ம் ஆண்டு கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளை சுனாமி பேரலைகள் தக்கியபோது, மரங்கள் நிறைந்த கடலோரப் பகுதிகள், சுனாமி பாதிப்பில் இருந்து பெரிதும் தப்பின. மேலும் அவ்வப்போது கடல் அலைகளின் சீற்றம் ஏற்படும்போதும் இந்த மரங்கள்தான் கடலோரப் பகுதிகளைப் பாதுகாத்து வருகின்றன.
÷இந்த நிலையில் கடலோரக் காவல் படையினர் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபடும்போது, கடலூர் துறைமுகப் பகுதி மறைப்பதாகவும், எனவே கடலோரத்தில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வனத் துறைக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் எழுதி உள்ளனர்.
÷இதுதொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டடைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், தமிழக அரசு தலைமைச் செயலருக்கு திங்கள்கிழமை கடிதம் எழுதி இருக்கிறார். அதில் கடலூர் சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டம். எங்கெல்லாம் மரங்கள் இருந்ததோ அங்கெல்லாம் சுனாமிப் பேரலைகள் தாக்கவில்லை.
÷எனவே சுனாமிக்குப் பிறகு இயற்கைப் பேரிடர்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில், பல கோடி செலவிட்டு மரங்கள் வளர்க்கப்பட்டு உள்ளன. கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள ரசாயன தொழிற்சாலைகளால் காற்று மாசுபடுவதைத் தடுக்க இந்த காடுகள் பெரிதும் உதவுகின்றன.
÷தீவிரவாதிகளைக் கண்காணிக்கிறோம் என்ற பெயரில், கடலோரப் பகுதிகளில் மரங்களை வெட்டிவிட்டு, அந்த நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க நினைப்பது சரியல்ல. எனவே கடலோரக் காவல்படையினரின் கோரிக்கையை அரசு ஏற்கக்கூடாது என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்.
÷இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் துரைசாமியிடம் கேட்டதற்கு, கடலில் ரோந்துப் பணியில் ஈடுபடும்போது துறைமுகம் மறைப்பதாகவும், எனவே மரங்களை வெட்ட வேண்டும் என்றும், கடலோரக் காவல் படையினர் வனத்துறைக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கடிதம் எழுதி உள்ளனர்.
÷சுனாமி போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து கடலோர மக்களைக் காப்பாற்ற பெரும் பொருள்செலவில், மரங்கள் நடப்பட்டு வருகின்றன.
÷எனவே மரங்களை வெட்டுவது குறித்து, மாவட்ட வனத்துறை முடிவு எதுவும் எடுக்க முடியாது. மக்களின் பாதுகாப்பு முக்கியத்தும் வாய்ந்த இந்தப் பிரச்னைக்கு அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

No comments:
Post a Comment