Islamic Widget

July 30, 2010

வெப் கேமரா புகைப்படம், கைரேகைகள் மூலம் பத்திரப் பதிவு

சென்னை மயிலாப்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கான புதிய முறையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் அந்தத் துறையின் அமைச்சர் சுரேஷ் ர

வெப் கேமரா மூலம் புகைப்படம் மற்றும் கைரேகைகளைப் பயன்படுத்தி பத்திரப் பதிவு செய்யும் முறை, சென்னையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதை, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 574 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களை கணினிமயமாக்கும் பணிகள் நிறைவுப் பெற்றுள்ளன. இதன்மூலம், தமிழகம் முழுவதும் உள்ள சொத்துகளின் பரிமாற்ற விவரங்களுக்கு எந்தவொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் வில்லங்கச் சான்று பெற்றுக் கொள்ள முடியும்.
வெப் கேமரா மற்றும் பயோ மெட்ரிக்: பத்திரப்பதிவில் முதன்முறையாக வெப் கேமரா, மின்னணு ரேகைப் பதிவு (பயோமெட்ரிக்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, 250 சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது. புதிய திட்டத்தின் தொடக்க விழா, சென்னை மயிலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை அமைச்சர் சுரேஷ் ராஜன் தொடங்கி வைத்தார்.
சிறப்பு அம்சங்கள்: புகைப்படம், கைரேகைகள் மின்னணு கருவிகள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், ஆவணப் பதிவின் போதுள்ள விண்ணப்பதாரர்களின் தெளிவான படங்கள் ஆதாரமாக சேகரிக்கப்படுகிறது.
ஆவணப்பதிவின்போதே மின்னணு கருவிகளால் புகைப்படம், கைரேகைகள் பதிவு செய்யப்படுவதால் மனிதத் தவறுகள் தடுக்கப்படும். போலி ஆவணப்பதிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளும் குறைக்கப்படும்.
மின்னணு முறையில் கைரேகைப் பதிவுகள் சேமிக்கப்படுவதால் இதனை தடவியல் போன்ற பிற துறைகளுக்கு எளிதில் அனுப்பி ஒப்பீடு செய்து சரிபார்க்கலாம்.
புகைப்படம் மற்றும் கைரேகைப் பதிவுகள் மின்னணு முறையில் சேகரிக்கப்படுவதால் அதன் தரம் குறையாமல் திரும்பப் பெற்று சரிபார்க்கவும், தேவை ஏற்படின் சட்டத்துக்கு உட்பட்டு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளவும் வழி ஏற்படும்.
ஒரு நபர் பல ஆவணங்களைத் தாக்கல் செய்யும் அல்லது எழுதிக் கொடுக்கும் சமயங்களில் ஒவ்வொரு ஆவணத்துக்கும் புகைப்படம் எடுத்து ஒட்டும் இப்போதைய நடைமுறைக்குப் மாற்று ஏற்படாக புதிய முறை செயல்படுத்தப்படும். மேலும், மக்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கான செலவு மற்றும் கால விரயம் குறையும்
நன்றி தினமணி

No comments:

Post a Comment