சிதம்பரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றதாக தமிழாசிரியர் விஸ்வநாதன் (46) தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றுபவர் விஸ்வநாதன். இவர் அப்பள்ளியில் பயிலும் 8, 9-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல்ரீதியில் தவறாக நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லாததால் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு சென்று தமிழாசிரியர் விஸ்வநாதனை தாக்கியுள்ளனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி மா.மூவேந்தன், இன்ஸ்பெக்டர் அறிவானந்தன் உள்ளிட்டோர் போலீஸôருடன் அங்கு சென்று விசாரணை நடத்தினர். தமிழாசிரியர் விஸ்வநாதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் புகார் அளித்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவள்ளி பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் தமிழாசிரியர் விஸ்வநாதனை தாற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதனால் சமாதானம் அடைந்த பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.
தமிழாசிரியர் விஸ்வநாதன் ஏற்கெனவே சி.என்.பாளையம் பள்ளியில் பணியாற்றும் போது இதுபோன்ற புகார்கள் எழுந்ததால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இப்பள்ளியில் புகார் எழுந்ததை அடுத்து பாலூருக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாணவிகள் புகார் தெரிவித்ததின் பேரில் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் தமிழாசிரியர் விஸ்வநாதன் தற்போது தாற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்
டுள்ளார்.
No comments:
Post a Comment