ரேஷன் கார்டுகளை உடனுக்குடன் அச்சிட்டு வழங்க எல்காட் நிறுவனத்துக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதில் காலதாமதம்
ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. மாவட்ட வழங்கல் துறையால் ஆய்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பல, ரேஷன் கார்டுகளை அச்சிடும் எல்காட் நிறுவனத்தில் அச்சிடாமல், முடங்கிக்கிடப்பதாக புகார்கள் கூறப்பட்டன.
இது தொடர்பாக உணவுப் பொருள்கள் வழங்குதுறை மற்றும் எல்காட் நிறுவனப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். ரேஷன் கார்டுகளை எல்காட் நிறுவனம் உடனுக்குடன் அச்சிட்டு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். வாரம் தோறும் இப்பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
அந்தந்த வாரம் அச்சிடப்படும் ரேஷன் கார்டுகள், மாவட்ட வழங்கல் அலுவலரிடம் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment