கடலூர் : பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் 1,389 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நாளை (24ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி எனது தலைமையில் ஒரு ஏ.டி.எஸ்.பி., 7 டி.எஸ்.பி.,க்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 100 சப் இன்ஸ்பெக்டர்கள், 300 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், 800 போலீசார், 150 ஆயுதப்படை போலீசார் என 1,389 பேர் பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
வழிபாட்டுத் தலங்கள், பஸ் ஸ்டாண்ட், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய சாலைகள், என 80 இடங்கள் அடையாளம் காணப் பட்டு அதிக கவனம் செலுத்தப்படும். 20 வாகனங்கள் மூலம் நெடுஞ்சாலைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். 10 சிறப்பு அதிரடிப்படை வாகனங்கள் இயக்கப்படுவதுடன் 27 இடங்களில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், ரயில் பாதைகளில் கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். வெடிகுண்டு கண்டுபிடிப்பு, செயலிழப்பு பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
Source: Dinamalar
No comments:
Post a Comment