தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தெற்கு கர்நாடகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. இதன் எதிரொலியாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
சாத்தூரில் 90 மில்லி மீட்டர் மழை: தமிழகத்திலேயே மிக அதிக அளவாக சாத்தூரில் 90 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதற்கு அடுத்தபடியாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 70 மில்லி மீட்டர் மழை பதிவானது.
இதர இடங்களில் புதன்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): வேதாரண்யம், மணல்மேல்குடி, ஏற்காடு 50, பேராவூரணி, சிவகாசி 40, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், கோவில்பட்டி, பொள்ளாச்சி, பவானிசாகர், கேத்தி, கூடலூர், உத்தமபாளையம், திண்டுக்கல் 30, ஊட்டி, ஆலங்குடி, அரிமளம், சிவகிரி, ஆத்தூர், வாழப்பாடி, சத்தியமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் 20, பரங்கிப்பேட்டை, வால்பாறை, மதுக்கூர்,ஒரத்தநாடு, நன்னிலம், நீடாமங்கலம், இலுப்பூர், கரம்பக்குடி, கீரனூர், புதுக்கோட்டை, மணியாச்சி, செய்யாறு, மேட்டூர் அணை, ஓமலூர், சின்னக்கல்லார், கோபிசெட்டிபாளையம், நடுவட்டம், மருங்காபுரி, பேரையூர், உசிலம்பட்டி, தேவகோட்டை, சிவகங்கை, ராஜபாளையம் 10.
சென்னையில்..: நகரில் கடந்த 2 நாள்களாக இரவில் புழுக்கமான நிலையே நீடித்தது. பகலில் வெப்ப நிலை 93 டிகிரியாக இருந்தது. இதனால் மெரீனா கடற்கரையில் காற்று வாங்க மக்கள் கூட்டம் திரண்டது. வியாழக்கிழமை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலையில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Source: Dinamani
September 23, 2010
பரங்கிப்பேட்டையில் 10 மில்லி மீட்டர் மழை பதிவு! தமிழகம், புதுவையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு!!
Labels:
pno செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- இறப்புச் செய்தி
- இணையதளத்தில் சன் நியூஸ் நேரடி ஒளிபரப்பு ?
- 2ஜி வழக்கில் கனிமொழி மீதும் குற்றப்பத்திரிகை?
- சவூதி: மதீனா சாலை விபத்தில் 18 பேர் பலி; 32 காயம்
- நாடு திரும்புகிறார் சவூதி மன்னர்: உற்சாக வரவேற்பு
- போலி ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ. 30 லட்சம் கொள்ளை: 5 பேர் கும்பல் கைது.
- பரங்கிப்பேட்டையில் கடல் சீற்றம்
- 39 மனைவியர், 94 பிள்ளைகளுடன் ஓர் இந்தியர்
No comments:
Post a Comment