Islamic Widget

February 22, 2011

ரூ.6 லட்சம் வழிப்பறி நாடகம் காசாளரின் உறவினர் இருவர் கைது

சிதம்பரம் : சிதம்பரத்தில் கூட்டுறவு ஊழியர்களைத் தாக்கி 6 லட்சம் ரூபாய் வழிப்பறி நாடகத்திற்கு உதவிய இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டைச் சேர்ந்தவர் பாலமுருகன். சிதம்பரம் வேளாண் உற்பத்தியாளர் விற்பனை சங்க காசாளர். இவர் கடந்த 14ம் தேதி அலுவலக பணம் 6 லட்சத்தை வங்கியில் செலுத்த ஆடிட்டர் தண்டபாணியுடன் சென்றார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிலையம் அருகே மோட்டார் பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த இரு வாலிபர்கள், இருவரையும் வழிமறித்து கத்தியால் தாக்கி பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிந்து வழிப்பறி ஆசாமிகளை தேடி வந்தனர்.சிதம்பரம் தாலுகா இன்ஸ்பெக்டர் புகழேந்தி, ரவுடிகள் ஒழிப்புப்படை சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்படையினர், சந்தேகத்தின் பேரில் பாலமுருகனிடம் தீவிர விசாரணை நடதினர்.

அதில், பாலமுருகன் ஏற்கனவே வங்கியில் பணம் கையாடல் செய்ததை சரி செய்வதற்காக, தனது உறவினரான பி.முட்லூர் சுந்தமூர்த்தி மகன் கனகராஜ் (26), புதுச்சேரி அய்யன்குட்டிபாளையம் பழனி மகன் வடிவேலு (29) ஆகியோர் உதவியுடன் வழிப்பறி நாடகமாடியது தெரிய வந்தது. பாலமுருகன் அரங்கேற்றிய வழிப்பறி நாடகத்திற்கு உதவிய கனகராஜ், வடிவேல் ஆகியோரை சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் கைது செய்து அவர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தார். பாலமுருகனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.



No comments:

Post a Comment