ஒரு கிலோ வெங்காயத்துடன் நாளை 14 ஜனவரி 2011 முதல் (வெள்ளிக்கிழமை) பொங்கல் காய்கறிகள் பை சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பையில், வாழைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், சேப்பங்கிழங்கு, பிடிகரணை, கூர்க்கிழங்கு, மொச்சை, பரங்கிக்காய், பூசணிக்காய், நெல்லிக்காய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகிய 12 வகையான காய்கறிகளும், ஒரு கிலோ வெங்காயம், ஒரு கிலோ தக்காளி, ஒரு கிலோ உருளைக்கிழங்கு ஆகியவையும் உள்ளன. இதன் விலை ரூ.100.
தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் (டி.யு.சி.எஸ்.) காமதேனு சூப்பர் மார்க்கெட்டுகளில் ரூ.100-க்கு பொங்கல் பையும், கரும்பு ஒரு ஜோடி ரூ.25-க்கும் விற்கப்பட்டு வருகிறது. பொங்கல் பையில், சர்க்கரைப் பொங்கல் செய்ய தேவையான 7 பொருட்கள்-பொன்னி பச்சரிசி 1/2 கிலோ, உருண்டை வெல்லம் 1/2 கிலோ, பாசிப்பருப்பு 100 கிராம், முந்திரி, உலர் திராட்சை, நெய் ஆகியவை தலா 50 கிராம், ஏலக்காய் 5 மற்றும் கைப்பையுடன் பொங்கல் பை ரூ.100-க்கு விற்கப்படுகிறது. மேலும், சுவையான பெரிய கரும்பு ஒரு ஜோடி ரூ.25-க்கும், சிறிய கரும்பு ஒரு ஜோடி ரூ.22-க்கும் விற்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை டி.யு.சி.எஸ். தனி அதிகாரி ஆர்.ஜி.சக்தி சரவணன் தெரிவித்துள்ளார்.
January 13, 2011
Subscribe to:
Post Comments (Atom)
- இறப்பு செய்தி
- காவி பயங்கரவாதம்' பற்றிய பேச்சு மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்
- இறப்பு செய்தி
- குற்றாலத்தில் தண்ணீர் கொட்டுகிறது
- சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: விமானத்தை தள்ளி செல்லும் வாகனத்தில் திடீர் தீ; 250 பயணிகளுடன் விமானம் தப்பியது
- இறப்புச் செய்தி
- சிப்காட்டில் பாசன வாய்க்காலில் ரசாயன கழிவுநீர்: சாலைமறியல்
- இலவசம் ! இலவசம் ! கல்வி இலவசம் ! ஏழை மாணவர்களுக்கு மட்டும் !
- உலக கோப்பை கிரிக்கெட்: பைனலில் அசத்தலாக நுழைந்தது இந்தியா
- இறப்பு செய்தி

No comments:
Post a Comment