Islamic Widget

May 12, 2016

இலவசம் ! இலவசம் ! கல்வி இலவசம் ! ஏழை மாணவர்களுக்கு மட்டும் !


                                                                     AYSHA ALI PRESCHOOL ANNOUNCES :
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் ......
அன்புடையீர் !
பணம் இல்லையா கவலை வேண்டாம் ! வாருங்கள் நாங்கள் இலவசமாக கல்வி தருகிறோம் !2015 -16 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்கை நடை பெறுகிறது !
ஆய்ஷா அலி பள்ளியானது கடந்த ஆண்டு திறக்கப்பட்டு சிறப்பாக செயல் பட்டு கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே !
கல்வியை வியாபாரமாக பார்க்காமல் , நாமும் வளர்வோம் அதே சமயத்தில் நமது சமுதாயமும் வளரட்டும் மேலும் கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்க கூடாது , எளியோருக்கும் அங்கில வலி கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளதுஎங்கள் பள்ளியில் கடந்த ஆண்டு மட்டும் 52 மாணவர்கள் சேர்ந்து கல்வி பயின்றார்கள்.
அந்த 52 மாணவர்களில் , 35 பேர் இலவச கல்வி திட்டத்தின் கீழோ அல்லது தங்களால் இயன்ற அளவு பீஸ் கட்டியோ கல்வி பயின்றனர் .
இந்த முயற்சிக்கு வலு சேர்க்கும் விதமாக ,எனது நண்பர்கள் மற்றும் சில நல உள்ளங்கள் படைத்த பெற்றோர்கள் தங்களூடைய மழலை செல்வங்களை முழு கட்டணத்தையும் கட்டி எங்கள் பள்ளியில் சேர்த்து ,இந்த பள்ளி திறம்பட செயல்பட உதவி புரிந்தனர் . அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்
மேலும் இந்த பள்ளியிக்கும் எந்த வெளிநாட்டு அமைப்புக்கும் தொடர்பு கிடையாது.. எந்த அமைப்பின் பணத்திலோ அல்லது தொண்டு நறுவனத்தின் உதவி பெற்றோ செயல் படவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். இது எங்களுடைய சொந்த பணத்திலும் பள்ளி குழந்தைகள் கட்டும் கட்டணத்தையும் அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது
கல்வி கட்டணம் என்ற சுமையை குறைக்கும் விதமாக
மேலும் கீழ கூரிபிட்டுள்ள எங்கள் பள்ளியின் விதிமுறை :.
1. வட்டிக்கு வைத்து எங்கள் பள்ளியில் கட்டணம் கட்ட கூடாது.
2. கடன் வங்கியும் கட்டணம் கட்ட கூடாது .
கட்டினால் பணத்தை கட்டு இல்லையென்றால் நடையை கட்டு என்ற கோட்பாடில் இருந்து சற்று விலகி
கட்டணம் கட்டி பயிலும் மாணவர்களும் எப்போது வேண்டும் என்றாலும் , அந்த கல்வி ஆண்டு முடியும் முன்பாக தங்களுடைய வசதிக்கு ஏற்ப கல்வி கட்டணத்தை கட்டலாம் என்ற சலுகையும் உண்டு
BREAK THE RULES !.
JOIN AND LIVE UP YOUR CHILDREN DREAMS!
BY
GHOUSE HAMEED
AYSHA ALI PRESCHOOL FOUNDER
நன்றி: Ghouse Hameed

No comments:

Post a Comment