குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலங்கள். ஆகஸ்ட் மாதம் இறுதியில் சாரல் மழை நின்று விடுவதுடன் அருவிகளில் தண்ணீரும் வெகுவாக குறைந்துவிடும். ஆனால் கடந்த மூன்று வருடங்களாக சீசன் நிறைவடையும் தருவாயிலும் அருவிகளில் தண்ணீர் நன்றாக கொட்டிவருகிறது.
ஐந்தருவியில் அனைத்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீர் நன்றாகவும், பெண்கள் குளிக்கும் பகுதியில் சுமாராகவும் விழுகிறது. பழையகுற்றாலம், புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
No comments:
Post a Comment