கடலூரில் இருந்து மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினர்.
கடலூர் நஞ்சலிங்கம்பேட்டை சங்கரன் (50), ஏழுமலை (50), பெரியக்குப்பம் கோவிந்தன் (52), சித்திரைப்பேட்டை சேகர் (42), சாமியார்பேட்டை முத்துசாமி (48) ஆகிய 5 மீனவர்கள் 19-ம் தேதி விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.
20-ம் தேதி அவர்கள், தங்களது விசைப்படகு உரிமையாளருடன் செல்ஃபோனில் பேசினர். அதன்பிறகு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.
இந்நிலையில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு காணாமல் போன மீனவர்களிடம் இருந்து செல்ஃபோன் மூலம் தகவல் வந்தது. அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும் கரை திரும்பிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்களின் படகு சேதம் அடைந்ததால் வேறு திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும், படகைப் பழுது பார்த்து அதில் கரை திரும்பிக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
சனிக்கிழமை மாலையே வந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர்களின் படகு என்ஜின் மீண்டும் பழுதடைந்தது. எனவே கடலூரில் இருந்து சென்ற விசைப்படகுகள் அதைக் கட்டி இழுத்து வந்தன.
மீனவர்களின் வருகைக்காக கடலூர் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை அவர்களின் உறவினர்களும் மற்றவர்களும் திரளாகக் கூடி இருந்தனர். 5 மீனவர்களும் கரைக்கு வந்ததும், அவர்களின் உறவினர்களைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
மீன் வளத்துறை உதவி இயக்குநர் சீனிவாசன், வட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி மற்றும் மீனவ கிராமப் பஞ்சாயத்தார் ஆகியோரும் மீனவர்களை வரவேற்றனர்.
மரணப் போராட்டம்
கடந்த 8 நாள்களாக அவர்கள் நடுக்கடலில் நடத்திய ஜீவ, மரணப் போராட்டம் குறித்து மீனவர்கள் தெரிவித்தது:
20-ம் தேதி மரக்காணம் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது, விசைப்படகு பழுதடைந்தது. படகின் கியர்பாக்ஸில் கோளாறு ஏற்பட்டு ஸ்டீயரிங்கை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
சரிசெய்ய முயன்றபோது கடல் காற்று, அலைகளின் சீற்றம் மற்றும் நீரோட்டம் காரணமாக இந்தியக் கடல் எல்லையை விட்டு 500 கடல் மைல்கள் தூரத்துக்கு அலைகளால் அடித்துச் செல்லப்பட்டோம். இதனால் செல்ஃபோன் செயல்இழந்தது.
கடலில் படகு மிகவும் மோசமாகத் தத்தளித்தது. 25-ம் தேதி பெரிய கப்பல்கள் 3 எங்களைக் கடந்து சென்றும், நாங்கள் வெள்ளைக் கொடி அசைத்தும் உதவிக்கு வரவில்லை. ÷கைவசம் இருந்த அரிசியை கஞ்சிகாய்ச்சியும், மீன்களைச் சுட்டும் சாப்பிட்டோம். ஐஸ் கட்டிகளை நீராக்கிக் குடித்தோம்.
இந்நிலையில் இலங்கைக் கடற்கரை தூரத்தில் தென்பட்டது. இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு விடுவோம் என்று அஞ்சி நடுங்கினோம். அதற்குள் படகைச் சரிசெய்து விட்டோம்.
26, 27 ஆகிய இரு நாள்கள் பயணித்து நாகைக் கடல் பகுதிக்கு சனிக்கிழமை காலை வந்தோம். அங்கிருந்து செல்ஃபோன் தொடர்பு கிடைத்தது என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
August 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை
- பற்றியெறிந்த வத்தக்கரை சில video காட்சி
- (no title)
- பரங்கிப்பேட்டையின் படகு நிலையத்தின் நிலையை பாருங்கள்
- தினம் ஒரு குர்ஆன் வசனம் Inbox X
- நெல்லிக்குப்பம்:மமக வேட்பாளர்கள் நகர்மன்ற வார்டில் வெற்றி!
- காவி பயங்கரவாதம்' பற்றிய பேச்சு மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்
- கடலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது
- பெண்ணின் கருப்பையில் இருந்து 22 கிலோ கட்டி அகற்றம்
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
No comments:
Post a Comment