சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் இரு தினங்களுக்கு முன், தேவேந்திரபுரம் எக்ஸ்டென்ஸன் பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார்
அப்போது, வழியில் நின்ற சேவல், வக்கீல் விஜயகுமாரை கொத்தியுள்ளது.பொதுவாக கொத்திய சேவலை "கல்'லால் அடித்து துரத்தி விடுவர். ஆனால், சாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார்.செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.
சேவல் கைது செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்த சேவலின் உரிமையாளர் கமலா என்பவர் நீதிமன்றத்திற்கு வந்து 200 ரூபாய் அபராதம் செலுத்தி, சேவலை மீட்டுச் சென்றார்.சேவல் மட்டுமல்ல, சாலையில் செல்லும் போது, எந்த விலங்கு தொந்தரவு செய்தாலும், போலீசில் புகார் தெரிவிக்கலாம் என, சேவலை "கைது' செய்த போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
December 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு

No comments:
Post a Comment