Islamic Widget

November 22, 2010

மீன்பிடி தொழில் பாதிப்பு கேரள மீன்களுக்கு கிராக்கி

கிள்ளை : சிதம்பரம் அருகே முடசல் ஓடை சுற்றுப்பகுதி மீனவர்கள் கடந்த சில தினங்களாக மீன்பிடி தொழிலுக்குச் செல்லாததால் கேரளாவில் இருந்து விற்பனைக்கு வந்துள்ள மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே முடசல் ஓடை சுற்றுப் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். கடல் அலை வழக்கத்தை விட அதிகரித்துள்ளதாலும், இரவு நேரத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வீசுவதால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் தங்கள் படகுகளை பாதுகாப்பு கருதி முடசல் ஓடையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

முடசல்ஓடை கடற்கரை பகுதியில் இருந்து சிதம்பரம் மீன் மார்க்கெட் பகுதிக்கு விற்பனைக்கு மீன்களை கொண்டு சென்ற நிலை மாறி, தற்போது கேரள மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இதனால், சிதம்பரம் மார்க்கெட்டில் மீன்களை கொள்முதல் செய்து வியாபாரிகள் கடற்கரையோரம் உள்ள கிராமங்களில் விற்பனை செய்வதால் விலை அதிகரித்துள்ளது.

Source:dinamalar

No comments:

Post a Comment