சிதம்பரம் : கோவை குழந்தைகள் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து சிதம்பரம் பள்ளியில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது. கோவை பள்ளிக் குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப் பட்ட சம்பவத்தால் பெற்றோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க,
குழந்தைகளை அழைத்துச் செல் லும் வாகனங்கள், டிரைவர்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையே பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவுரை பேனர் வைக்கப் பட்டுள்ளது. அதில், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகனத்தின் டிரைவர் பற்றிய விவரங்களை அதன் உரிமையாளர் மூலம் அறிந்து வைத் துக் கொள்ள வேண்டும். இத்தகவலை பள்ளிக்கும் தெரியப்படுத்த வேண்டும். தினமும் குழந்தையை அழைத்துச் செல்லும் வாகனம் இதுதானா என கண்காணிக்க வேண்டும்.
அறிமுகம் இல்லாதவர்களோடுசெல்லக்கூடாது என குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். குறித்த நேரத்தில் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல வேண்டும் போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த முறையை சிதம்பரத்தில் உள்ள பள்ளி மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கலாமே.
Source:dinamalar
No comments:
Post a Comment