பரங்கிப்பேட்டை ஒன் றிய ஊராட்சிகள் மற்றும் விருத்தாசலம் நகராட்சியில் உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது. பரங்கிப்பேட்டை ஒன்றியம் நக்கரவந்தன் குடி ஊராட்சியில் தலைவர் குலசேகர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராதா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். தில்லைவிடங்கனில் தலைவர் மோகன்தாஸ் தலைமையில் துணைத் தலைவர் மதிகுமார், மாவட்ட கவுன்சிலர் நல்லத்தம்பி பங்கேற்றனர்.
மேலத்திருக்கழிப்பாலையில் பொன்னுசாமி தலைமையில், துணைத் தலைவர் கீதாராணி உட் பட பலர் பங்கேற்றனர். கணக்கரப்பட்டில் தலைவர் வனிதா அசோகன் தலைமையிலும், கீழத்திருக்கழிப்பாலையில் தலைவர் சின்னத் தம்பி தலைமையிலும், பள்ளிப்படையில் தலைவர் தனலட்சுமி ரவி தலைமையிலும், நஞ்சைமகத்து வாழ்க்கையில் தலைவர் தனசேகரன் தலைமையில் நடந்தது.
மீதிகுடியில் தலைவர் சின்னதுரை தலைமையிலும்,மேல் புவனகிரி ஒன் றியம் சி.முட்லூர் ஊராட் சியில் தலைவர் தவமந்திரி வெங்கடேசன் தலைமையிலும், தில்லை நாயகபுரத்தில் தலைவர் அஞ்சம் மாள் பாலகிருஷ்ணன் தலைமையிலும், மேல் அனுவம்பட்டில் தலைவர் லட்சுமணன் தலைமையிலும் உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது. விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சியில் துணை சேர்மன் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். தி.மு.க., - பா.ம.க., கவுன் சிலர்கள் மட்டும் பங்கேற் றனர். சேர்மன் முருகன், கமிஷனர் திருவண்ணாமலை, அ.தி.மு.க., - தே.மு.தி.க., கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. விழாவில் தென் கோட்டை வீதி, மணலூர் உள்ளிட்ட நகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தி பரிசு, மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது.
Source: dinamalar
November 03, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- கதையல்ல நிஜம் - தாயினாலேயே நிர்வாணப்படுத்தபட்ட மகள்
- 4 நிமிடத்தில் நடத்திய கைவரிசை ஏடிஎம் மெஷினை திறந்து ஸி21 லட்சம் கொள்ளை
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- கடலூர் எல்லைகளில் "செக்போஸ்ட்' துணை ராணுவம் தீவிர சோதனை
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
No comments:
Post a Comment