பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதிக்கப்பட் டவர்களுக்கு வீடு கட்டித் தரவேண்டும் என முதல்வருக்கு பேரூராட்சி துணைத் தலைவர் செழியன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு அவர் அனுப் பியுள்ள மனு: பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு அங்காளம்மன் கோவில் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சுனாமியின் போது இப்பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு நான்கு பேர் இறந்தனர். வெள்ளாற்றில் இருந்து 200 மீட்டர் தூரம் உள்ள பகுதிகளுக்கு அரசு மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டது. 200 மீட்டருக்கு அதிகமாக உள்ள பகுதிகளுக்கு தொண்டு நிறுவனம் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால் கடந்த சுனாமியின் போது இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் இறந்தனர். அப்படி இருந் தும் வீடு கட்டித் தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டனர். சுனாமியால் பாதிக்கப் பட்ட ஆரியநாட்டு அங் காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்களுக்கு அரசு மூலம் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Source: dinamalar
November 03, 2010
பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதித்தவர்களுக்கு வீடு வழங்க கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
- பற்றியெறிந்த வத்தக்கரை சில video காட்சி
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- வசதி இல்லாத முதியோருக்கு இலவச ஹஜ் பயண வசதி
- கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை; பரங்கிப்பேட்டையில் 12 மில்லி மீட்டர் மழை பெய்தது
- மல்லிகைப் பூ ஒரு முழம் 50 ரூபாய்!
- உலகின் மிகக் குறைந்த விலை டேப்லட் பிசி இந்தியாவில் அறிமுகம்
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை அதிகாரி பணி நீக்கம்!
- ஹதீஸில் பிரார்த்தனைகள்
- ஹஜ் பெருநாள் மதீனா
No comments:
Post a Comment