பரங்கிப்பேட்டை : புதுச்சத்திரம் அருகே சாலையின் மேல் தண்ணீர் செல்வதால் கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் அருகே கள்ளுகடைமேடு பஸ் நிறுத்தத்தில் இருந்து மேல் பூவாணிக்குப்பம் கிராமத்திற்குச் செல்ல நெடுஞ்சாலைத் துறை சாலை உள்ளது.
பருவமழை காரணமாக பெருமாள் ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் பூவாணிக்குப்பம் கிராமத்திற்கு வந்ததால் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளது. மேலும் பூவாணிக்குப்பம் சாலையில ஒரு கி.மீ., தூரத்திற்கு சாலையின் மேல் மூன்று அடி உயர்த்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூவாணிக்குப்பத்தில் உள்ளவர்கள் கடலூர், சிதம்பரம் செல்ல கள்ளுக்கடை மேடு பகுதிக்கு வந்து பஸ் ஏற வேண்டும் என்பதால் இரண்டு நாட்களாக சம்பாரெட்டிபாளையம் வழியாக மேட்டுப்பாளையம் வந்து பஸ் ஏறுகின்றனர். பள்ளி மாணவர்கள் குள்ளஞ்சாவடி வழியாக கடலூருக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் பரவனாறு வழியாக வடிந்தால்தான் இயல்பு வாழ்க்கை திரும்பும்.
Source:dinamani
November 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முற்றுகை: 22 பேர் கைது
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- தங்கம் விலை அதிரடி உயர்வு!
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
No comments:
Post a Comment