சவூதி அரேபியாவில் ரியாத் - தமாம் நகரங்களுக்கிடையே மட்டுமே, அல்ஹஸ்ஸா நகர் வழியாக தொடர்வண்டி போக்குவரத்து நடைபெறுகிறது.
நேற்று அதிகாலை அல்ஹஸ்ஸாவில் சரக்கு தொடர் வண்டியின் இரு பெட்டிகள் தடம்புரண்டதில் இருப்புப்பாதைகளில் பணிசெய்துகொண்டிருந்த ஐவர் சிக்கி பலியாயினர். இன்னுமொருவர் ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.
இந்த விபத்து காரணமாக, ரியாத்-அல்ஹஸ்ஸா இடையேயான 4 தொடர்வண்டிகள் நிறுத்தப்பட்டன. சவுதி ரெயில்வேத்துறை தலைவர் அப்துல் அஸீஸ் அல்ஹொகைல் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் "தனிமனிதத் தவறுதான் இந்த விபத்துக்குக் காரணம், நாட்டின் 98 விழுக்காடு இருப்புப்பாதை விபத்துகளுக்கு தனிமனிதத் தவறுகளே காரணமாக அமைகின்றன. ஐரோப்பிய தரத்துக்கு சவுதி ரெயில்வேயின் பாதுகாப்பு நுட்பங்கள் விரைவில் உயர்த்தப்பட உள்ளன" என்று தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதமும் இதேபோன்ற ஒரு விபத்து தமாம் நகரருகே, சமிக்ஞை விளக்கு (Signal) செயற்படாததால் நிகழ்வுற்றது. எனினும் அதில் உயிர்பலி ஏற்படவில்லை.
Source: inneram.com
No comments:
Post a Comment