கடந்த சனியன்று ஜெத்தாவின் கந்தாரா பகுதியில் வசித்துவந்த பாகிஸ்தானிய பெண், 30 வயதான நஜ்மா மஹ்மூது இரத்தச்கதியில் கொலையுண்டு கிடந்தார்.இதுபற்றி அவருடைய தாய்மாமன் குலாம் காதிர் என்பார் காவல்துறையில் முறையீடு செய்திருந்தார். இக்கொலையை சவூதியின் குற்றப்புலனாய்வு துறை விசாரித்து வந்தது.
கொலையாளி எவ்வித எதிர்ப்புமற்று வீட்டில் நுழைந்திருப்பதை வைத்து, தெரிந்தவர்தாம் இக்கொலையை செய்திருக்கவேண்டும் என்று காவல்துறை கருதியது.
இந்நிலையில், அல் அஸீஸியா பகுதியில் ஒளிந்திருந்த நிஸார்பக்ஷ் என்கிற 31 வயது கொலையாளியை நேற்று காவல்துறை கைது செய்தது. கொலையுண்ட பெண்ணுக்கு கொலையாளி ஒன்றுவிட்ட சகோதர முறையிலுள்ளவராவாராம்.
பதட்டமின்றியும், புன்னகைத்தும் காணப்பட்ட கொலையாளி, 'ஒழுக்கக்கேடான நடத்தையைப் பொறுக்காமலே கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், உம்ராவுக்கு வந்து அதிகக்காலம் தங்கிவிட்ட அப்பெண் அப்படிப்பட்ட நடத்தையுடையவர் அல்ல என்று குடும்பத்தாரும், அக்கம்பக்கத்தினரும் தெரிவித்துள்ளனர்.
ஜெத்தாவின் அல்-கந்தாரா பகுதி அடர்த்தியான மக்கள் நெருக்கமும், குற்றச்செயல்களும் நிரம்பியது என்கின்றனர் ஜெத்தாவாசிகள்.
Source: inneram.com
No comments:
Post a Comment