கடலூர்: கடலூர் நகரத்தில் பாதாள சாக்கடைத் திட் டத்திற்காக தோண்டப் பட்ட சாலைகளை புதுப் பிக்க தமிழக அரசு 11 கோடி ரூபாய் நிதி ஒதுக் கீடு செய்துள்ளது.
கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் 40 கோடி ரூபாயில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங் கப்பட்டது. ஒரே ஆண்டில் முடிக்க வேண்டிய இத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் முடிக்கப்படவில்லை.
நகரம் முழுவதும் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டி சின்னா பின்னமாக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செய்து வரும் இப்பணிகள் முடிந்து ஒப்படைக்கப் பட்ட சாலைகளும் இன் னும் புதியதாக சார்சாலை போடாமல் இருந்து வருகிறது. நகராட்சியில் போதிய அளவு நிதி இல்லாததால் சாலை பணிகள் உடனடியாக மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தது.இந்நிலையில் தமிழக முதல்வர் பாதாள சாக் கடை பணிகள் நடக்கும் நகராட்சிகளில் சாலை சீரமைப்பிற்காக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவிட்டார். இந்த நிதியைப்பெற கடந்த மாதம் கடலூர் நகராட்சியில் அவசர கூட்டம் நடத்தி புதிய பணிகள் நிறைவேற்றிட 15 கோடி ரூபாய் தேவை என தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. அதன்பேரில் முதல்வர் கடலூர் நகரத்தில் சாலை பணிகள் மேற்கொள்ள 11 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான டெண்டர் விடும் பணி விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது.
Source: Dinamalar
October 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- இறப்புச்செய்தி
- ஹசாரேவுக்கு கல்யாண மண்டபம் கொடுத்த ரஜினியிடமும் கறுப்பு பணம் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- ஆசியாவின் மிகவும் மதிப்புக் குறைந்த கரன்சியாக மாறிய இந்திய ரூபாய்.
- குஜராத் கலவரம்-அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!
- சர்ச்ச்சைக்குரிய இடத்தை 3 பிரிவாக பிரிக்க வேண்டும் : அலகாபாத் கோர்ட் தீர்ப்பு
- முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யகோரி பெண்கள் அமைப்பினர்(NWF) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
- மய்யத் செய்தி
No comments:
Post a Comment