கடலூர்: கடலூர் - நெல்லிக் குப்பம் சாலை அரசு மருத்துவமனை எதிரில் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக ஒன்னரை ஆண்டிற்கும் மேலாக ஒரு பகுதி மூடப்பட்டு ஒரு வழிப்பாதையிலேயே வாகனங்கள் சென்று வருவதால் விபத் துகள் அதிகரித்து வருகிறது.கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணி துவங்கி மூன்றாண்டுகளுக்கு மேலாகியும், நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நெடுஞ் சாலை துறை அதிகாரிகளின் ஒத்துழையாமையால் பணிகள் முடிவடையாமல் காலம் கடத்தப் பட்டு வருகிறது. நகரின் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாகி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள நிறைந்த கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் விபத் துகளும் அதிகரித்தது.அதனையொட்டி நெல்லிக்குப்பம் சாலையில் கலெக்டர் முகாம் அலுவலகம் எதிரில் உள்ள ரவுண்டானா முதல் அரசு மருத்துவமனை அடுத்த தேவி கருமாரியம்மன் கோவில் வரை சாலையின் நடுவில் தடுப்பு கட்டைகள் கட்டி இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. இதனால் விபத்துகள் ஓரளவிற்கு குறைந்தது.இந்நிலையில் இந்த சாலையின் வடக்கு பகுதியில் அரசு விருந்தினர் மாளிகை முதல் தேவி கருமாரியம்மன் கோவில் வரை பாதாள சாக்கடை திட்ட பணி மேற்கொள்வதற்காக கடந்த 2009ம் ஆண்டு போக்குவரத்தை தடை செய்து, சாலை மூடப்பட்டது.சாலையில் ராட்சத குழாய்கள் புதைக்க பள் ளம் தோண்டிய போது தண்ணீர் ஊற்று எடுத்ததால் பணி தடைபட்டது. பின்னர் குழாய் புதைக் கும் ஆழத்தை குறைக்க முடிவு செய்து திட்டம் மாற்றி அமைத்து ஒரு வழியாக ஒன்னரை ஆண்டிற்கு பிறகு பணியை முடித்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், சாலையை நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைத்து, சாலையை புதுப்பிப்பதற்கான தொகையையும் செலுத்தியுள்ளனர்.ஆனால் நெடுஞ்சாலைத் துறையினர், போக் குவரத்து மிகுந்த இந்த சாலையை சீரமைக்க ஆர் வம் காட்டாமல் காலம் கடத்தி வருவதால் ஒரு வழிப் பாதையிலேயே அனைத்து வாகனங்கள் சென்று வர வேண்டியுள்ளது. மேலும், இந்த சாலையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றி வரும் 108 ஆம்புலன்சுகள் கூட விரைவாக செல்ல முடியாத நிலை உள்ளது. தினசரி சிறு விபத்துகள் அதிகம் நடந்து வருகிறது.
கடந்த ஒன்னரை ஆண்டாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள வடக்கு பகுதி சாலையை தனியார் ஆம்புலன்சுகள், ஆட்டோக்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட் டுள்ளது. மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் பலர் இந்த சாலை வழியாக தினசரி சென்று வந்தபோதிலும், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காதது வேதனையாக உள்ளது. இனியேனும் விரைந்து சாலையை சீரமைத்து இருவழி போக்குவரத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Source: Dinamalar
October 06, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பரங்கிப்பேட்டை'மின்வாாிய அலுவலகம் முக்கிய அறிவிப்பு
- இறப்புச்செய்தி
- ஹசாரேவுக்கு கல்யாண மண்டபம் கொடுத்த ரஜினியிடமும் கறுப்பு பணம் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாக்கு
- பாபர் மஸ்ஜித் இடத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமாம்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
- ஆசியாவின் மிகவும் மதிப்புக் குறைந்த கரன்சியாக மாறிய இந்திய ரூபாய்.
- குஜராத் கலவரம்-அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு!
- சர்ச்ச்சைக்குரிய இடத்தை 3 பிரிவாக பிரிக்க வேண்டும் : அலகாபாத் கோர்ட் தீர்ப்பு
- முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யகோரி பெண்கள் அமைப்பினர்(NWF) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
- மய்யத் செய்தி
No comments:
Post a Comment