பரங்கிப்பேட்டை : செக் மோசடி வழக்கில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த கீரப்பாளையம் திருப்பணி நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (45). மீன்சுருட்டி அடுத்த கஞ்சன் கொல்லை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர். இவர் கடந்த 2007ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி புவனகிரி எம்.பி., கோவில் தெருவில் இரும்பு கடை வைத்துள்ள வீரமணியிடம், 10 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி செக் கொடுத்தார். அதை வீரமணி, வங்கியில் செலுத்தியபோது பழனிவேல் கணக்கில் பணம் இல்லாதது தெரியவந்தது.
இதுகுறித்து வீரமணி, பரங்கிப்பேட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் இளங்கோவன், செக் மோசடி செய்த ஆசிரியர் பழனிவேலுவிற்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதித்தார்.
Source: Dinamalar - Photo: mypno
October 28, 2010
செக் மோசடி வழக்கு; ஆசிரியருக்கு சிறை; பரங்கிப்பேட்டை கோர்ட் தீர்ப்பு
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கிளைநூலக கட்டிடத்தை மாற்றகோரி கைருன்னிசா மனு
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
No comments:
Post a Comment