கடலூர்:கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்ற ராமேஸ்வரம் விரைவு ரயில் லூப்லைன் வழியாக சென்ற போது, ரயில் பெட்டி உரசி நடைபாதை மீண்டும்
சேதமடைந்தது.சென்னை - மயிலாடுதுறை வழியாக கடந்த ஏப்., 23ம் தேதி முதல் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடலூர், திருப்பாதிரிபுலியூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள லூப்லைன் வழியாக, கடந்த ஆக., 27ம் தேதி விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ரயில் விடப்பட்டது. அப்போது ரயில் பெட்டி, நடைபாதையில் உரசி சேதமடைந்தது. மேலும், ரயில் பெட்டி திடீரென குலுங்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவத்திற்கு பின், திருச்சி மண்டல ரயில்வே மேலாளர் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனை ஆய்வு செய்தார். பின், இந்த லூப்லைனில் உள்ள குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு, மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.நேற்றிரவு 2 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனை கடக்கும் போது, ஏற்கனவே ரயில் பெட்டி உரசிய இடத்தில், மீண்டும் ராமேஸ்வரம் விரைவு ரயிலின் பெட்டி உரசியது. இதில் நடைபாதை சேதமடைந்தது.
Source: Dinamalar
October 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment