தனது உதவியாளரை அடித்துக் கொலை செய்த வழக்கில் சவுதி இளவரசருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடியாக 20 ஆண்டுகள் சிறை தண்டணை அளித்து தீர்ப்பளித்து உள்ளது.
சவுதி அரேபிய இளவரசர் சவூத் பின் அப்துல் அஜீஸ் (வயது 34). இவர் சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ்வின் பேரன் ஆவார். சென்ற பிப்ரவரி மாதம் 15-ந் தேதி லண்டனில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சவூது பின் அப்துல் அஜீஸ் தங்கி இருந்தார். அப்போது அங்கு தன்னுடன் இருந்த உதவியாளரை அவர் அடித்து சித்ரவதை செய்து கொலை செய்தார்.
இளவரசர் சவூத் ஓரின சேர்க்கையில் ஈடுபட அவரது உதவியாளரை அழைத்து அதற்கு அவர் உடன்படாததால் அவரை கொலை செய்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அவரை லண்டன் காவல்துறையினர் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் சவுதி அரேபிய அரச குடும்பத்தின் செல்வாக்கை பயன்படுத்தி இளவரசர் சவூதை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து வெளியுறவுத் துறை விதிப்படி சவூத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுபோன்று சவூத் ஏற்கனவே ஒருமுறை அதிகமான மது போதையில் ஒருவரை தாக்கி உள்ளார் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தற்போது இந்த கொலை தொடர்பாக சவுதி இளவரசர் சவூத் பின் அப்து அஜிஸ்க்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டணை விதித்து, லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. இதுபற்றி நீதிபதி டேவட் பீன் கூறுகையில், "கொலை வழக்கில் இளவரசர் ஒருவர் குற்றவாளியாக இருப்பது வழக்கத்திற்கு மாறாக உள்ளது. யார் குற்றம் செய்து இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம்'' என்று தெரிவித்தார்.
Source: inneram.com
October 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- அயோத்தி ராமர் கோயில் - காவி Vs காவி!
- ஒரு கிலோ பூண்டின் விலை ரூ. 300!
- ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு : அக்.2ல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்
- வாரணாசி குண்டு வெடிப்புக்கு தமுமுக கடும் கண்டனம் - உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்
- பரங்கிப்பேட்டையில் ஜெயலலிதா மீதான வழக்கு 42-வது முறையாக ஜூன் 13 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment