கடலூர் : கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடலூர் சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் சவுரிமுத்து தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் கருப்பையன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நடராஜன், பொன்னுசாமி, ஸ்டாலின், கார்த்திகேயன், குப்புசாமி உட்பட பலர்
பங்கேற்றனர். கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 26 ஆயிரத்து 119 வீடுகளும், இந்திரா குடியிருப்புத் திட்டத்தில் 4,336 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதன் காரணமாக கட்டுமான பொருட்களான செங்கல், கம்பி, சிமென்ட், மணல் உள்ளிட்ட பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஆனால் தமிழக அரசு 200 சதுர அடி வீடு கட்ட 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் பயனாளிகள் கடனாளிகளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதிலும் சிரமம் உள்ளது. இந்த நிலையை மாற்றிட கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், "கான் கிரீட்' வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 25ம் தேதி மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Source: Dinamalar
October 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !
- இறப்புச் செய்தி
- புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்க அழைப்பு !
- பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய பள்ளி ஆசிரியர் கைது!
- லைலத்துல் கத்ரின் சிறப்பு
- உதைபந்தாட்ட மோதல் 74 பேர் பரிதாப மரணம் 1000 பேர் காயம்..
- கடும் அவதியில் மக்கள் – நிவாரணக்காட்சிகள்
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- பக்கீம்ஜாத் குளம் தூர் மற்றும் பசுமைபடுத்த ஆலோசனை கூட்டம்
- பரங்கிப்பேட்டை: கிராவல் லாரிகள் தடை கோரி பொதுமக்கள் சாலை மறியல்
No comments:
Post a Comment