கடலூர் : தஞ்சாவூரில் நடந்த மாநில நீச்சல் போட்டியில் கடலூர் அணி 25 தங்கம் உட்பட 54 பதக்கங்களை வென்றது. தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தமிழகத்தில் இருந்து 15 அணிகளைச் சேர்ந்த 350 பேர் பங்கேற்றனர். கடலூர் அணி சார்பில் 30 பேர் பங்கேற்றனர்.
அதில் அக்ஷரா வித்யாஷரம் பள்ளி மாணவர்கள் நாக ராகவேந்திரா ஒரு தங்கம், நவீன் ஒரு தங்கம் ஒரு வெள்ளி, சஞ்சய் பால் தினகர் ஒரு வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களை வென்றனர். பெடிட் செமினார் பள்ளி சுதாமன் ஒரு வெண்கலம், சி.கே.பள்ளி செபா பிராங்களின் ஒரு தங்கம், ஒரு வெண்கலம், நிர்மல்காந்த் ஒரு தங்கம், சூர்ய பிரசாத் ஒரு தங்கம், டேவிஸ் நிரஞ்சன் 3 தங்கம், சுசிந்தர் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், கவுரவ் சேகரன் ஒரு தங்கம், ஹரிணி ஸ்ரீ ஒரு வெள்ளி, பிளஸ்ஸட் மதர் தெரசா பள்ளி ருக்ஷனா 2 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை பெற்றனர்.
ஆரோ சைல்டு பள்ளி விமல் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், ஷெர்வின் ஜெகா 2 தங்கம், ஒரு வெள்ளி, கிருஷ்ணசாமி பள்ளி சுதர்ஷன் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், ஜனார்த்தனன் ஒரு வெள்ளி, லதீஷ் ஷரன் ஒரு தங்கம், ஒரு வெண்கலம், பல்ராம் ஒரு தங்கம், மகாத்மா காந்தி இன்டர் நேஷனல் பள்ளி விஜயகுமார் ஒரு வெள்ளி, அர்ஷித்தா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பெற்றனர். செயின்ட் மேரீஸ் பள்ளி கோடீஸ்வரி 2 தங்கம், புனித அன்னாள் பள்ளி லட்சுமி சுவாதிகா 3 வெள்ளி, ரக்ஷனா ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம், ஏ.ஆர்.எல்.எம்., சுபாஷ் சுந்தரம் 3 தங்கம், ஒரு வெள்ளி, அபிஷேக் ஒரு தங்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் அருணா ஆகியோரை மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பாராட்டினார்.
Source: Dinamalar
October 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment