பன்றிக் காய்ச்சல் தமிழகத்தில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். சென்னை பொது மருத்துவமனையில் ஸ்ரீ பெரும்புதூரைச் சேர்ந்த வசந்தி (40) என்ற பெண் சனிக்கிழமை உயிர் இழந்தார். இவருக்கு சுவாசக் கோளாறு இருந்தது. ஏற்கனவே தைராய்டு மற்றும் நீரழிவு நோயாலும் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் அவருக்கு பன்றிக் காய்ச்சலும் பரவியதால் அவரை காப்பாற்று வதில் சிரமம் ஏற்பட்ட தாக சென்னை அரசு மருத்துவமனை அதிகாரி தெரிவித்தார். மேலும் 7 பேருக்கு பன்றிகாய்ச்சல் அறிகுறி இருப்பதால் அதற்கான சிகிச்சை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் கொடுக்கப் படுகிறது.
இதில் 3 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 20 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.
இதைத் தொடர்ந்து பன்றி காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க தடுப்பூசி இன்று முதல் போடப்படுகிறது. இருமல்- சளியுடன் வைரஸ் காய்ச்சல் இருந்தால் பன்றி காய்ச்சலுக்கான அறி குறிகளாக இருக்கலாம். உடல் சோர்வு, உடல்வலி போன்றவை பன்றி காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளாகும்.
தலைவலி, மூக்கில் இருந்து நீர் தொடர்ந்து வருதல், கை, கால் வலி போன்ற அறிகுறிகள் தோன்றிய உடனே அருகில் உள்ள மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெற்றால் உயிர் இழப்பு ஏற்படாது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பன்றி காய்ச்சல் என்று சொல்லக்கூடிய “ஸ்வேன் புளு” வராமல் தடுப்பது குறித்து பொது சுகா தாரத்துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் கூறியதாவது:-
மற்றவர்களிடம் இருந்து பரவக்கூடிய பன்றிகாய்ச்சல் நோயில் இருந்து பாதுகாத்து கொள்ள தினமும் 5 முறை கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டையால் முகத்தை மூட வேண்டும். பின்னர் அந்த துணியை சுத்தம் செய்ய வேண்டும்.
நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மக்கள் திரளாக கூடுகின்ற இடங்களில் நோய் பரவவாய்ப்பு உள்ளது. அதனால் அது போன்ற பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்தால் பன்றி காய்ச்சலில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
தொண்டை வலி இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
நுரையீரல் நோய், சிறுநீரக பாதிப்பு, இருதய நோய், நீரழிவு நோய், ஆஸ்துமா, கர்ப்பிணி பெண் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 5 வயதுக்கு உட்பட்டவர் களுக்கும் பன்றி காய்ச்சல் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரி விக்கிறார்கள்.
பெரியவர்களுக்கு இந் நோய் தொற்று 3 அல்லது 4 நாட்களுக்கு இருக்கும். குழந்தைகளுக்கு ஒரு வாரம் இருக்கும். எனவே பொதுமக்கள் மருத்துவர் களை உடனே அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நன்றி cwo
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- எடியூரப்பாவின் கைது கட்சிக்கு அவமானம் – ஒப்புக்கொள்கிறார் அத்வானி
No comments:
Post a Comment