Islamic Widget

September 08, 2010

கடலூர் கடலில் அலை சீற்றம்

கடலூர்:கடலூர் சில்வர் பீச்சில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் கரையோரப் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.பவுர்ணமி, அமாவாசை நாட்களில் கடல் அலையின் சீற்றம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்படும். அலையும் இரண்டு மீட்டர் உயரம் வரை எழும்பும். இந்த நாட்களில் கடல் அலை ஊருக்குள் புகுவதும், உள்வாங்குவதும் அடிக்கடி நிகழந்து வருகிறது. அமாவாசை நாள் என்பதால் கடலூர் சில்வர் பீச்சில் நேற்று அலை சீற்றம் காணப்பட் டது. இதனால் கடல் நீர் வழக்கத்தைவிட 50 மீட்டர் தூரத்திற்கு கரையை கடந்தது. கரையோரப் பகுதியில் மூன்று அடிக்கு மண் அரிப்பு காரணமாக பள்ளம் ஏற்பட்டது. எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் சில்வர் பீச்சில் நேற்று பொது மக்களின் வருகை குறைந்து காணப்பட்டது.

No comments:

Post a Comment