கிள்ளை:சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவு வகுப்பு மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் கணிதம் மற்றும் வேதியல் பிரிவு மாணவர்கள் நேற்று காலை கல்லூரி நுழைவு வாயிலில் நின்று கொண்டு நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும். எம்.எஸ்சி., கணிதம் பாட வகுப்பு துவக்க வேண்டும். சமச்சீர் கல்வி கொண்டு வருவதுடன், மற்ற நாட்டு பல்கலைக்கழகம் இந்தியாவில் தலையிடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரிக்குள் சென்ற மாணவர்களை தடுத்து நிறுத்தினர். மற்ற துறை மாணவர்கள் ஸ்டிரைக்கிற்கு ஒத்துழைப்புத் தராமல் கல்லூரிக்குள் சென்றனர்.
இதனால் ஆவேசமடைந்த கணிதம் மற்றும் வேதியியல் துறை மாணவர்கள் கல்லூரிக்குள் சென்ற மாணவர்களை தாக்க முயன்றதால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.தகவலறிந்த அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், சப் இன்ஸ் பெக்டர் மாரிமுத்து மற் றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்படாத கணிதம் மற்றும் வேதியியல் துறை மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டுச் சென்றனர். மற்ற துறை மாணவர்கள் வழக் கம் போல் வகுப்புக்குச் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 6 ஆண்டுகள் வரை சிறை. மத்திய அரசின் புதிய சட்டம்.
- துரோகமே செய்தாலும் காங்கிரஸை நான் மறவேன்....''-ததஜ!!!
- கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் வெள்ளை அடிக்கும் பணி
- பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டைக்கு முட்லூர்-புதுச்சத்திரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்படுமா?
- பூக்கள் விலை கிடுகிடு உயர்வு ஒரு கிலோ மல்லிகை விலை க்ஷீ800 ஆனது
- பரங்கிப்பேட்டை : நீர் உயிர் நச்சு கருத்தரங்கம்
- கடலூர் எல்லைகளில் "செக்போஸ்ட்' துணை ராணுவம் தீவிர சோதனை
- கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும்: குரேஷி!
- எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!
No comments:
Post a Comment