Islamic Widget

September 08, 2010

எப்போது முடியும் சிதம்பரம் புறவழிச்சாலை?

சிதம்பரம் : உலக வங்கி நிதி உதவியுடன் ஐந்து ஆண்டிற்கு முன் துவங்கப்பட்ட சிதம்பரம் புறவழிச்சாலைப்பணி முடிந்தும், இணைப்பு சாலை அமைப்பதில் தொடர்ந்து தொய்வு ஏற் பட்டுள்ளதால் சாலை பயன் பாட்டிற்கு வருவது தாமதமாகி வருகிறது.

நெடுஞ்சாலைத் துறையின் தமிழ்நாடு சாலை மேம்பாடு திட்ட புறவழிச்சாலைகளில், சிதம்பரம் புறவழிச்சாலையும் ஒன்று. விருத்தாசலம் கோட் டத்திற்கு உட்பட்ட சிதம்பரம் புறவழிச்சாலை 61 கோடி ரூபாய் செலவில் 17 கி.மீ., நீளத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு துவங்கிய பணி ஒப் பந்தப்படி, 2007ம் ஆண்டு முடிந்து பயன்பாட்டிற்கு வந் திருக்க வேண்டும். ஆனால், ஆறு ஆண்டுகளாகியும் பணி முடியாததால் சாலை பயன் பாட்டிற்கு வருவது தாமதமாகி வருகிறது.
 தனியாரிடம் இருந்து நில ஆர்ஜிதம், சாலையோர மரங் கள் வெட்டியது, கட்டடங்கள் இடித்தது என மூன்று ஆண்டுகள் காலம் கடந்தது. பு.முட் லூர் - சி. முட்லூர் இணைக் கும் வெள்ளாற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் பாலம் கட் டும் பணி சவாலாக இருந்து முடிக்கப்பட்டது. சி.முட் லூர், மணலூர் பாசிமுத்தான் வாய்க்கால், அம்மாபேட்டை கான்சாகிப் வாய்க்கால் என மொத்தம் நான்கு பெரிய அள விலான பாலங்கள் மற்றும் 53 சிறு பாலங்கள் என அத்தனை பணிகளும் கடந்த ஆண்டிலேயே முடிந்து சாலை போக் குவரத்துக்கு தயாராகிவிட்டது.
வெள்ளாற்று பாலத்தில் இணைப்பு சாலை பணி முடிந் ததும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பி.முட்லூரில் இருந்து இச் சாலை வழியாக அனைத்து வாகனங்களும் சிதம்பரம் சென்று வருகின் றன. இதனால், பி.முட்லூரில் இருந்து சிதம்பரத்திற்கு புவனகிரி வழியாக 16 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய நிலையில் புறவழிச்சாலை வழியாக 8 கி.மீ., தூரத்தில் சிதம்பரத் திற்கு வந்துவிடுகின்றன.
கடவாச்சேரியில் இணைப் புச்சாலை மந்தமாக நடைபெற்று வருவதால், புறவழிச் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆனால், சிதம்பரம் நகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள் ளாமல் இருக்க பெரும்பாலான வாகன ஓட்டிகள், புறவழிச்சாலையில் சென்று, கடவாச்சேரியில் முடிக்கப்படாத இணைப்பு சாலை பகுதியில் ஆபத்தான நிலையில் பள்ளத் தில் இறங்கி சீர்காழி சாலையில் செல்கின்றனர். இதனால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
சிதம்பரம் அருகே 2006ம் ஆண்டு முடிந்திருக்க வேண் டிய நாகை மாவட்டத்திற் குட் பட்ட அரசூர் - செங்கமேடு வரையிலான 8 கி.மீ., புறவழிச்சாலை பணியும், பனமங்கலம் உப்பனாற்றில் ரயில்வே பாலம் அமைக்கும் பணியால் தாமதமாகி வருகிறது. சிதம்பரம் புறவழிச்சாலைக்கு பிறகு துவக்கப்பட்ட பல சாலைகள் பயன்பாட் டிற்கு வந்து பழைய சாலையாகி விட்ட நிலையில், சிதம் பரம் - சீர்காழி புறவழிச்சாலை பணி ஒப்பந்த காலம் முடிந் தும், பல ஆண்டுகளை கடந் தும் முடிவுக்கு வரவில்லை.
எனவே, பணியை விரைந்து முடித்து போக்குவரத்துக்கு திறந்துவிட்டால் சிதம்பரம், சீர்காழி, புவனகிரி என நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், நேர விரயமும் குறையும். பின்தங் கிய மாவட்டங் களான நாகை, திருவாரூர் உள்ளிட்ட பகுதியில் தொழில் வளம் பெருகவும், மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் வாய்ப்பு ஏற்படும்.
"சாபக்கேடாய்' சிதம்பரம் : விழுப்புரத்தில் இருந்து சிதம்பரம் வழியாக மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணி 2006ம் ஆண்டு துவங்கி 2010ல் தான் முடிவடைந்தது. பாலம் கட்டுவதில் இடையூறு, பணி செய்ய முடியாமல் கான்ட் ராக்டர்கள் பின்வாங்கியது. அதிகாரிகளின் ஆர்வமின்மை என பல காரணங் களால் தாமதமாகியது. பல கட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கோர்ட் வழக்கு வரை சென்று, தற் போது ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதே நிலையில் தான் சிதம்பரம் புறவழிச்சாலை பணியும் உள்ளது.
சட்டசபையில் தொகுதி அ.தி. மு.க., எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் பேசியும், பல்வேறு அரசியல் கட்சியினர் அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. சிதம்பரம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிதி ஒதுக்கி மூன்று ஆண்டாகியும் இதுவரை டெண்டர் கூட விடவில்லை. அந்த திட்டம் டெண்டர் விட்டு, எப்போது பணி துவக்கி, எப்போது முடியப் போகிறது என்பதும் தெரியவில்லை. சிதம்பரத்தை பொறுத்த வரையில் எந்த பணியாக இருந்தாலும் சாபக்கேடாகவே உள்ளது.

No comments:

Post a Comment