Islamic Widget

September 08, 2010

சிறப்பாக செயல்பட்ட போலீஸ் தனிப்பிரிவுகள் கலைப்பு:குற்றங்கள் பெருகும் என பொதுமக்கள் அச்சம்

கடலூர்:மாவட்டத்தில் குற்றங் களை தடுத்திட போலீஸ் துறையில் செயல்பட்டு வந்த ரவுடி ஒழிப்புப் படை உள்ளிட்ட நான்கு தனிப்படைகள் திடீரென கலைக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் குற்றங் கள் அதிகரிக்குமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கடலூர் மாவட்டத்தில் தீவிரவாத அமைப்புகள் செயல்பாடு அதிகரித்தது. மேலும், ஜாதிய கலவரமும் அதிகரித்து வந்ததால் மாவட் டத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது.ஒரு பிரச்னை ஏற்பட் டால் அதுபற்றி வழக்குப் பதிந்து விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே அடுத்த சம்பவம் நடக்கும்.


பழைய சம்பவத்தை விட்டுவிட்டு, புதிய சம்பவத்தை போலீசார் விசாரிக்க துவங்கியதால் மாவட்டத்தில் கொலை, கொள்ளை மற்றும் வழிப் பறி சம்பவங் கள் அதிகரித்தன. போதாக்குறைக்கு கள்ளச் சாராய வியாபாரமும் கொடிகட்டி பறந்தது. இதன் காரணமாகவும் பல் வேறு பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற் பட்டது.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டிட கடந்த 94ம் ஆண்டு அப் போதைய எஸ்.பி., ரவிச் சந்திரன் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தவும், தீவிரவாதிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கூலிப் படை மற்றும் கொள்ளை சம்பவங்களை கண்டுபிடிக்கவும் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளை கொண்ட தனிப்படை அமைத்தார்.இப்படையினர் இரவு, பகலாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டதால் கள்ளச் சாராய விற்பனை பெருமளவு தடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வந்த எஸ்.பி.,க்கள் சைலேந்திரபாபு, அபய் குமார் சிங், டேவிட்சன் போன்றோர்களும் இதே பார்முலாவை பின்பற்றினர். எஸ்.பி.,டேவிட்சன் காலத்தில் இரண்டு "டெல்டா' படை உருவாக் கப்பட்டது. இதனால் அப் போது மாவட்டத்தில் கள் ளச்சாராய விற்பனை முற் றிலுமாக தடுக்கப்பட்டது.அதேபோன்று மாவட் டத்தில் 20 ஆண்டுகளுக் கும் மேலாக வேரூன்றி இருந்த தமிழர் விடுதலைப் படையினர் சந்தன கடத்தல் வீரப்பனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அமைப்பை வலுப்படுத்தி வந்த பலர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு பல ஆண் டாக தலைமறைவாக இருந்தவர்களையும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கூலிப்படையினரை கைது செய்து வந்ததால் மாவட் டத்தில் வன்முறைச் சம்பவங்களும், குற்றச் செயல்களும் குறைந்ததால், தனிப் படைகள் கலைக்கப்பட்டது.
இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த ஓராண்டாக கொலை, வழிப்பறி, கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்தன. இவற்றில் பல சம்பவங்களில் குற்றவாளிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை பயன்படுத்தி வந்ததால் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.புதிதாக பொறுப்பேற்ற எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ், கொலை, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களைத் தடுக்க மீண்டும் ஐந்து தனிப்படைகளை அமைத்தார்.புதிதாக உருவாக்கப் பட்ட ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார், இதுவரை 178 ரவுடிகளை கைது செய்துள்ளனர். மேலும், கஞ்சா, லாட்டரி சீட்டு மொத்த வியாபாரிகளையும், பிடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்றனர்.இந்நிலையில் திருநாவலூர் தொடக்க வேளாண் வங்கி கொள்ளை மற்றும் தூக்கணாம்பாக்கம் கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் பிடிக்க முயன்ற இருவர் இறந்தனர்.இதனைக் கண்டித்து சில அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.
இதுகுறித்து சமீபத்தில் முதல்வர் தலைமையில் நடந்த போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் கேள்வி எழுப்பியதோடு, தனிப்படைகளை கலைக்க டி.ஜி.பி., உத்தரவிட்டதை தொடர்ந்து, மாவட்டத்தில் சிறப்பாக இயங்கி வந்த நான்கு தனிப்படைகளையும் கலைத்து எஸ்.பி., உத்தரவிட்டார்.இந்த படைகளில் இருந்தவர்களை போலீஸ் ஸ்டேஷன்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.தனிப்படை போலீசாரின் தீவிர நடவடிக்கையால் மாவட்டத்தில் குற் றங்கள் குறைந்து வந்த நிலையில், தனிப்படையை கலைத்துள்ளதால் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் தலை தூக்கிவிடுமோ என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment