மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாணவர் மணிகண்டன் (18), பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார். இங்குள்ள ஒ.வெ.செ., மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் இவர் கண்டுபிடித்துள்ள கருவியின் பெயர் "3 ஜி வெய்கிள் கன்ட்ரோலர்'. இக்கருவியில் மொபைல் போன் பொருத்தப்பட்டுள்ளது.
பைக் திருடு போகும் பட்சத்தில், அந்த மொபைல் போனை தொடர்பு கொண்டவுடன், அதே இடத்திலேயே இன்ஜின் நின்று விடும்; அலாரம் அடிக்கும், ஸ்டார்ட் ஆகாது. பைக் இருக்கும் இடம் குறித்து, நமது மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., வரும். (மொபைல் நிறுவனத்தின் டவர் அமைந்துள்ள இடத்தை சுட்டிக்காட்டும்). "சைடு ஸ்டாண்ட்' போட்டு நிறுத்தி விட்டு, மறதியாக அதே நிலையில் பைக்கை எடுத்தால், ஸ்டார்ட் ஆகாது. பகலில் முகப்பு விளக்கை "ஆன்' செய்து பைக் ஓட்டினாலும், எரியாது;
இரவில் தானாகவே விளக்குகள் ஒளிரும். ஹெல்மெட் அணிந்தால் தான் ஸ்டார்ட் ஆகும். செல்லும் போது ஹெல்மெட்டின் கிளிப்பை கழற்றினால் கூட, பைக் நின்றுவிடும். பிரேக் ஷூ தேய்ந்திருந்தால், அதுகுறித்து ஒலி எழுப்பும். விபத்து ஏற்படும் போது "108' ஆம்புலன்ஸ், போலீஸ், உறவினர் ஒருவருக்கும் தானாகவே எஸ்.எம்.எஸ்., செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மணிகண்டன் கூறுகையில், ""சிறுவயதில் இருந்தே கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் துறையில் ஆர்வம் அதிகம். ஆசிரியர்கள், உறவினர் ஒருவரும் இக்கருவியை தயாரிக்க ஊக்கம் அளித்தனர். இதன்மதிப்பு 3,000 ரூபாய்,'' என்றார். இவரது தந்தை டீ கடையில் வேலை செய்கிறார். படிப்பில் முதலிடத்தில் வரும் மணிகண்டனுக்கு பொதுநல அமைப்புகள் உதவினால், இன்னும் பல கருவிகளை கண்டுபிடிப்பார்.
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு

No comments:
Post a Comment