பரங்கிப்பேட்டை,: கிள்ளை பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கிள்ளை பேரூராட்சி சேர்மன் ரவிச்சந்திரன், தமிழக முதல் வர் மற்றும் மின் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு:கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட பிச்சாவரத்தில் சுற்றுலா மையம் செல்லும் சாலை, தைக்கால், சிங்காரகுப்பம், சி.மானம்பாடி, பொன்னந் திட்டு, கூழையார், முடசல் ஓடை பகுதிகளில் பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்தத்தால் தெருவிளக்குகள் எரிவதில்லை.வீடுகளிலும் மின் பற்றாக்குறை மற்றும் குடிநீர் பிரச்னை நீடிக்கிறது. இங்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுனாமி குடியிருப்புகள், 14 சமுதாய கூடங்கள், சுயஉதவிக் குழுக்களால் நடத்தப் படும் காகித ஆலைகள் கட்டப்பட்டு மின் இணைப்பு கொடுக்கப்பட் டுள்ளது.கடந்த 30 ஆண்டுகளாக மின் ஒயர்கள் மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. இந்த ஆண்டு சிதம்பரம் மின் கோட்டத்தின் மூலம் பல கிராமங்கள் மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பழைய ஒயர்கள் மாற்றப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தில் கிள்ளை பேரூராட்சி புறக்கணிக்கப்பட்டுள்ளது. பலமுறை நேரிலும், கடிதம் மூலமாகவும் சிதம்பரம் கோட்ட மின்பொறியாளருக்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கிள்ளை பேரூராட்சி மூலம் மின்சார வாரியத்திற்கு மாதம் இரண்டு லட்சம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். எனவே குறைந்த மின் அழுத்தத்தை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.
Source: Dinamalar
Subscribe to:
Post Comments (Atom)
- என்ன செய்தார் எம்.எல்.ஏ. செல்வி ராமஜெயம் ?
- மகனை வைத்து பின்லேடனைப் பிடிக்க புஷ் போட்ட திட்டம்!
- சவூதி: "சினிமா தேவை" என்கிறார் உயர் அதிகாரி
- இடைமறித்து எதிரி ஏவுகணைகளை தாக்கும் இந்தி ஏவுகணைச் சோதனை வெற்றி
- முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது
- விஷ வண்டுகளை அழிக்க பரங்கிப்பேட்டை தீயணைப்பு படையினர் தயக்கம்
- மோடியின் உண்ணாவிரதத்தில் போலீசார் தடியடி!
- உதவி தொகை வழங்கும் விழா
- விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் ரூ. 21 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்
- எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல – திக்விஜய் சிங்
No comments:
Post a Comment