Islamic Widget

August 17, 2010

சிதம்பரம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., - ம.தி.மு.க. வெளிநடப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் குடிநீர் அபிவிருத்தி திட் டத்தை செயல்படுத்த குடிநீர் இணைப்பு டெபாசிட் தொகை உயர்த்துவது தொடர்பான தீர்மானத்தை கண்டித்து நகர மன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க., - ம.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.சிதம்பரம் நகர மன்ற கூட்டம் தலைவர் பவுஜியா பேகம் தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொறுப்பு) மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங் கேற்றனர்.கூட்டத்தில் சிதம்பரம் நகரில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்த பொதுமக்களிடம் குடிநீர் இணைப்பு டெபாசிட் தொகை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஒட்டு மொத்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் இந்த தீர்மானத்தை கண் டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அ.தி.மு.க., கவுன்சிலர் கள் மணிவேல், சிவராம தீட்சிதர், செந்தில் குமார், ஜெயவேல், சரோஜா, குமார் மற்றும் ம.தி.மு.க., சீனுவாசன் ஆகிய 7 பேரும் வெளிநடப்பு செய்தனர்.அதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் வருமாறு:ரமேஷ் (பா.ம.க.,): சிதம்பரம் நகரில் மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கொடுக்கப்பட முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் பொதுமக்களிடம் குடிநீர் இணைப்பு டெபாசிட் தொகை உயர்த்துவது சாத்தியமில்லாதது, லாட்ஜ், திருமண மண்டபங்களில் கூடுதல் தொகை வசூலிக்கலாம். இது தொடர்பாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்.
ஜேம்ஸ் விஜயராகவன் (தி.மு.க.,): நகரில் ஏற்கனவே வீடுகளுக்கு உள்ள குடிநீர் இணைப்புக்கு டெபாசிட் தொகை அதிகம் உயர்த்த வேண்டாம். புதிய இணைப்பு கேட்பவர்களிடம் உயர்த்தி வசூலிக்கலாம். மேலும் லாட்ஜ் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குடிநீர் டெபாசிட் தொகை உயர்த்தலாம்.அப்பு சந்திரசேகர் (தி.மு.க.,): சமீபத்தில் மா.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தில் சிதம்பரம் நகரில் குடிசைப் பகுதி மேம் பாட்டுத் திட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 392 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட் டுள்ளதாக தவறான புள்ளி விவரம் தரப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.147 வீடுகள் தான் கட்டி முடிக்கப்பட் டுள்ளதாக கமிஷனர் கூறுகிறார். ம.கம்யூ., கூட்டத்திலும், இந்த கூட்டத்திலும் தலைமை ஏற்ற நீங்கள் எந்த கூட்டத்தில் பேசியது சரி, இதுபோன்று பொய் யான தகவல்களை பொதுமக்களிடம் பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.,): சிதம்பரம் மேம்பாலம் அருகே இலவச கழிப்பிடத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதை தற்காலிகமாக மூடவேண்டும். (தி.மு.க., கூட்டணி உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அந்த கழிவறையை மூட டேபிள் தீர்மானம் கொண்டு வர மனு கொடுத்து உடனடியாக நிறைவேற்றப்பட்டது)மணிகண்டன் (தி.மு.க.,): சிதம்பரம் தெற்கு வீதியில் காலை 11 மணிக்கு குப்பை அள் ளப் படுகிறது. எனவே நகரில் நான்கு வீதிகள், நான்கு சன்னதிகள், பஸ் நிலையம், வேணுகோபால் தெரு ஆகிய பகுதிகளை சுத்தப்படுத்தும் பணியை, நகராட் சியில் தற்போது தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள 30 துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண் டும் என்றார்.

Source: Dinamalar

No comments:

Post a Comment