பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 2008 ம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் ஒரு வாரம் முகாமிட்டு கர்நாடக போலீசார் மதானியை இன்று கைது செய்தனர். முன்னதாக அளித்த பேட்டியில் மதானி இது தனக்கு எதிராக பின்னப்பட்ட அரசியல் சதி வலை என கூறியுள்ளார்.
பெங்களூரு குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் 15 பேர் காயமுற்றனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானிக்கும் தொடர்பு இருப்பதாக வழக்கில் இவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இவரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் 15 ம் தேதி கோர்ட் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. 3 முறை வாரன்ட் பிறப்பிக்கப்பட்டும் மதானியை கைது செய்ய முடியாமல் போனது . தற்போது 4 வது முறை பிடிவாரன்ட் உத்தரவு வந்தது . இன்று ( செவ்வாய்க்கிழமை ) தான் இறுதி நாள் என்றும் போலீசாருக்கு கோர்ட் கெடு விதித்திருந்தது.
இதனையடுத்து கர்நாடக போலீசார் கேரளாவில் முகாமிட்டனர். இவரது நடவடிக்கையை கண்காணித்தனர். மதானி கைது செய்யக்கூடுமோ என்ற காரணத்தினால் மதானி வீட்டில் அவரது ஆதரவாளர்கள் கூடினர்.
ஆம்புலன்சில் வந்தாரா மதானி ? : இந்நிலையில் மதியம் அவர் கோர்ட்டில் ஆஜராக புறப்பட்டு சென்றார். கர்நாடக, கேரள் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைது செய்ய முற்பட்ட போது போலீசாருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் சிறிய தள்ளு, முள்ளு ஏற்பட்டது. ஆம்புலன்சில் வந்தாரா : இவர் வீட்டில் இருந்து ஆம்புலன்சில் கிளம்பியதாகவும், இவர் ஆஸ்பத்திரியில் சேர முயற்சித்ததாகவும் , இந்நேரத்தில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.கைது செய்யப்பட்ட போது தனது ஆதவாளர்களுக்கு முத்தம் கொடுத்து கண்ணீர் விட்டார் மதானி.
திரும்பி வருவேனா : மதானி பேட்டி: முன்னதாக இன்று காலையில் நிருபர்களிடம் பேசி மதானி , இது எனக்கு எதிராக பின்னப்பட்ட அரசியல் சதி வலை , நான் ஒன்றும் அறியாதவன். பெங்களூரு சம்பவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் சரண் அடைய முற்பட்ட போது போலீசார் என்னை கைது செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர். அந்த குற்றவாளிகள் யாரும் என்னுடன் பேசவில்லை என்றார் . மேலும் அவர் கூறுகையில்; நான் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்பட்டால் திரும்பி வருவேனா என்பது எனக்கு தெரியாது.
இப்போது கர்நாடகா என்று சொல்வார்கள், பின்னர் மும்பை, குஜராத், ஏன் உலக வர்த்தக மையம் வரை நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளது என்று கூட சொல்வார்கள் . இவ்வாறு மதானி கூறினார்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு பின்னர் போதிய ஆதாரம் இல்லை என விடுதலையானார் .

No comments:
Post a Comment