சிதம்பரம் : சிதம்பரம் வடிகால் வாய்க்காலில் துர்நாற்றத் துடன் மனித உடல் மிதப் பதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் வாகீசன் நகரையொட்டி வடிகால் வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்காலில் உள்ள பாலம் அருகே நேற்று காலை துர்நாற்றம் வீசியது. மேலும் வாய்க்காலில் கவிழ்ந்த நிலையில் ஏதோ மிதந்தது. மனித உடல் மிதப்பதாக தகவல் பரவியதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு கூடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சிதம்பரம் நகர போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் வாய்க்காலில் இறங்கி பார்த்தபோது சாக்கு மூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியது தெரியவந்தது.
இதனால் யாரையோ கொலை செய்து மூட்டையில் கட்டி வீசியுள்ளனர் என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்தது. உடன் பொக்லைன் மூலம் சாக்கு மூட்டையை கரைக்கு எடுத்து வந்து பிரித்துப் பார்த்தனர். அதில் அழுகிய நிலையில் இறந்த மீன்கள் இருந்தது. அதேப் போன்று ஐந்து மூட்டைகளில் இறந்த மீன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தினர். கொலை செய்து வாய்க்காலில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அணுகிய போலீசாருக்கு இறந்த அழுகிய மீன்கள் என தெரியவந்ததும் நிம்மதியடைந்தனர்.
நன்றி தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)
- சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை
- பற்றியெறிந்த வத்தக்கரை சில video காட்சி
- (no title)
- பரங்கிப்பேட்டையின் படகு நிலையத்தின் நிலையை பாருங்கள்
- தினம் ஒரு குர்ஆன் வசனம் Inbox X
- நெல்லிக்குப்பம்:மமக வேட்பாளர்கள் நகர்மன்ற வார்டில் வெற்றி!
- காவி பயங்கரவாதம்' பற்றிய பேச்சு மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்
- கடலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது
- பெண்ணின் கருப்பையில் இருந்து 22 கிலோ கட்டி அகற்றம்
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
No comments:
Post a Comment