Islamic Widget

August 28, 2010

"மாயமான மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தாவிட்டால் மறியல்'

கடலூர் : கடலூரில் மீன் பிடிக் கச் சென்று காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தாவிட்டால் சாலை மறியல் செய்வோம் என மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.






கடலூர் அடுத்த தம்மனாம்பேட்டையைச் சேர்ந் தவர் அஞ்சாபுலி (47). இவருக்குச் சொந்தமான விசைப் படகில் கடந்த 19ம் தேதி அதிகாலை கடலூர் முதுநகர் அடுத்த நஞ்சம்பேட்டை சங்கரன் (50), ஏழுமலை (53), பெரியக்குப்பம் கருப்பர் (55), சித்திரைப்பேட்டை சேகர் (55) உட்பட ஐந்து பேர் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.





படகின் உரிமையாளர் அஞ்சாபுலி 20ம் தேதி மாலை மொபைல் போன் மூலம் கடலுக்குள் சென்ற மீனவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பிறகு மீனவர்கள் நிலை குறித்து தெரியாததால் அச்சமடைந்த மீனவர்கள், காணாமல் போனவர்களை கண்டு பிடித்துத் தரக்கோரி 26ம் தேதி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.





கடலோர காவல் படை ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்கள் மூலம் தேடுவதாக கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்தார். ஆனால் காணாமல் போன மீனவர்கள் குறித்து நேற்று காலை வரை எவ்வித தகவல்களும் தெரியவில்லை. இதனால் கடலூர் பகுதியில் உள்ள மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.



மேலும், 10க்கும் மேற் பட்ட மீனவர்கள் வெள் ளைக் கொடி கட்டிய நான்கு விசைப் படகுகளில் மீனவர்களைத் தேடி கடலுக்குள் சென்றனர். இந்நிலையில் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கடலூர் மாவட்ட மீன் வளத் துறை உதவி இயக்குநர் சீனுவாசனுடன் (பொறுப்பு) 2 மணி நேரம் பேச்சுவார்தை நடத்தினர். காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தாவிட்டால் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். தொடர்ந்து மீனவ கிராமங்களில் பதட்டம் நிலவி வருகிறது.

நன்றி தினமலர்

No comments:

Post a Comment