சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சென்னை மருத்துவத்துறை இயக்குனர் தலைமையிலான குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் தலைமை டாக்டர், நர்சு இருவர் இட மாற்றம் செய்யப்பட்டனர். 24 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடந்த விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல் வம், திடீர் ரெய்டு நடத்தினார். அப்போது மருத்துவமனை பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடாக இருந்ததாலும், டாக்டர்கள் முதல் பணியாளர்கள் வரை பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் தலைமை டாக்டர் நடராஜன் உள் ளிட்ட அனைவரையும் எச் சரித்தார். உடனடியாக மருத்துவத்துறை இயக்குனருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.
அமைச்சரின் அதிரடி உத்தரவையடுத்து மருத்துவத்துறை இயக்குனர் புரு÷ஷாத்தம் விஜயகுமார் தனது குழுவினருடன் நேற்று அதிகாலை சிதம்பரம் வந்தனர். காலை 7 மணியளவில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் போன்று மாறு வேடத்தில் ஒவ் வொரு பிரிவையும் கண்காணித்தனர். மேலும் தனித்தனியாக டாக்டர்களிடம் சிகிச்சையும் பெற்றனர். மருத்துவமனையை ஆய்வு செய்த போது டாக்டர்கள் முதல் பணியாளர்கள் வரை தாமதமாக வருகை தந்தது. அனைத்து பகுதிகளும் சுகாதார சீர்கேடாக இருந்தது தெரியவந்தது.
மூன்று மணி நேரம் ரெய்டு நடத்தி விட்டுச் சென்ற குழு மீண்டும் 12 மணியிலிருந்து அடுத்த கட்ட ரெய்டில் இறங்கி இரவு 7 மணி வரை தொடர்ந்தது. இதனையடுத்து மருத்துவமனை தலைமை டாக்டர் நடராஜனை ராமநாதபுரத்திற்கும், தலைமை நர்சு பேபியை கோயமுத்தூர் அடுத்த பல்லடத்திற்கு அதிரடியாக மாற்றம் செய்து இயக் குனர் உத்தரவிட்டார்.
மேலும் மூன்று உதவி டாக்டர்கள், மகப்பேறு உதவியாளர் ஒருவர், 4 செவிலியர்கள், ஒரு சுகாதார பார்வையாளர், துணை செவிலியர் ஒருவர், தலைமை மருந்தாளுநர் உட்பட 5 மருந்தாளுனர் கள், எக்ஸ்ரே பணியாளர் ஒருவர், மூன்று மருத்துவமனை பணியாளர் உள் ளிட்ட 24 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு "மெமோ' கொடுத்தார். சிதம்பரம் மருத்துவமனையில் நேற்று நடந்த அதிரடி ரெய்டால் மருத்துவமனையே ஆட்டம் கண் டது. "மெமோ' கொடுக்கப் பட்ட ஊழியர்கள் சோகத் துடன் காணப்பட்டனர். சிலர் அழுது கொண்டே இயக்குனர் இருந்த அறைக்கு வெளியே நின்றிருந்தனர்.
தலைமை டாக்டர் சரியில்லை: சிதம்பரம் மருத் துவமனையில் தலைமை டாக்டர் சரியில்லாததே சீர்கேட்டிற்கு காரணம் என மருத்துவத்துறை இயக் குனர் புரு÷ஷாத்தம் விஜய குமார் கூறினார்.
அவர் கூறியதாவது: சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உத் தரவுபடி மாறுவேடத்தில் நோயாளிகளோடு கலந்து கண்காணித்தோம். சரி யான நேரத்திற்கு ஊழியர் கள் வேலைக்கு வராமல் ஒழுங்கீனமாக நடந்து கொண்டனர். மருத்துவ மனை வளாகம் சுகாதார சீர்கேடாக இருந்தது. தலைமை மருத்துவர் சரியில்லாததே சிதம்பரம் மருத்துவமனை சீர்கேட் டிற்கு காரணம். அவர் சரியில்லாததால் தான் மனிதநேயம் இல்லாத மருத்துவமனையாக மாறி யுள்ளது. போதிய அளவில் வசதிகள் செய்யப்பட்டும் மருத்துவமனையை சரியாக பராமரிக்கவில்லை.
கடந்த மே மாதம் 14ம் தேதி நான் இதே மருத்துவமனையில் சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் அதே தவறை மீண்டும் செய்துள்ளதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை விதி 20(1)ன் கீழ் நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றிய தலைமை மருத்துவர் நடராஜன் ராமநாதபுரத்திற்கும், தலைமை செவிலியர் பேபி கோயமுத்தூருக்கும் மாற்றம் செய் யப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக காட்டுமன்னார் கோவில் தலைமை மருத்துவர் சங்கரலிங்கம் கூடுதல் பொறுப்பும், கடலூர் தலைமை செவிலியர் ரூபி ஜோபிதம் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். எலும்பு முறிவு டாக்டர் விரைவில் நியமிக்கப்படுவர். மொத்தம் உள்ள 22 டாக்டர்களில் 9 பணியிடங்கள் காலியாக உள்ளது. விடுப்பில் உள்ள மருத்துவர்கள் பணியில் சேர எச்சரிக்கை கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.
மருத்துவமனையின் புனரமைப்பிற்காக சுற்றுச் சுவர், போர்வெல், வடிகால் வசதி உள்ளிட்டவைகளுக்கு பொதுப்பணி துறை மூலம் 45 லட்சம் ரூபாயில் பணிகள் துவங்க திட்டம் தீட்டப்பட்டுள் ளது. அரசு டாக்டர்கள் மனித நேயத்தோடு மக்களுக்கு பணியாற்ற வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.
சோகத்திலும் "காமெடி' : ரெய்டின் போது தங்களுக்கு உடல் நலம் சரியில்லை என டாக்டர்களிடம் தனித்தனியாக சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு டாக்டர்களும் மருந்து கொடுத்து ஆலோசனை வழங்கினர். குழுவின் முக்கிய அதிகாரி ஒருவர், சித்த மருத்துவ பிரிவிற்கு சென்றார். உடலில் அரிப்பாக உள்ளது என கூறினார். அவரை பரிசோதித்த டாக்டர் அர்ச்சுனன், மருந்து கொடுத்து நான்கு நாட்கள் கழித்து கண்டிப்பாக வரவேண்டும். அப்போதுதான் முழுமையாக குணமாகும் என்று கூறியுள்ளார்.
புன்சிரிப்புடன் அந்த அதிகாரியும், "கண்டிப்பாக வருகிறேன்' என கூறிவிட்டுச் சென்றார். டாக்டர்களை இயக்குனர் விசாரிக்க அழைத்த போது, அவரிடம் சிகிச்சை பெற்றவர் ரெய்டு அதிகாரிகளுள் ஒருவராக இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை மற்ற டாக்டர்களிடம் கூறியதும் வேதனையை மறந்து அங்கிருந்த டாக்டர்கள், பணியாளர்கள் சிரித்து விட்டனர்.
நன்றி தினமலர்
August 28, 2010
நோயாளிகள் போர்வையில் இயக்குனர் குழு "ரெய்டு' : "ஆட்டம்' கண்டது சிதம்பரம் அரசு மருத்துவமனை
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- சிமி அமைப்பின் ஐவர் சிறையில் இருந்து விடுதலை
- பற்றியெறிந்த வத்தக்கரை சில video காட்சி
- (no title)
- பரங்கிப்பேட்டையின் படகு நிலையத்தின் நிலையை பாருங்கள்
- தினம் ஒரு குர்ஆன் வசனம் Inbox X
- நெல்லிக்குப்பம்:மமக வேட்பாளர்கள் நகர்மன்ற வார்டில் வெற்றி!
- காவி பயங்கரவாதம்' பற்றிய பேச்சு மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை மன்மோகன்சிங் நீக்க வேண்டும்; பா.ஜனதா வற்புறுத்தல்
- கடலூர் மாவட்டத்தில் 9ம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்குகிறது
- பெண்ணின் கருப்பையில் இருந்து 22 கிலோ கட்டி அகற்றம்
- வெளிநாட்டு மோகம்... தீராத சோகம்...
No comments:
Post a Comment