Islamic Widget

August 14, 2010

நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு


புதுடெல்லி : இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா மீண்டும் எச்சரித்துள்ளது. சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியாவில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கவில்லை. எனினும், தீவிரவாத தாக்குதல்களிலிருந்து இந்தியா இன்னும் தப்பிக்கவில்லை. எந்நேரத்திலும் இந்தியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா எச்சரித்திருந்தது. நாட்டின் 64&வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்கா நேற்று வெளியிட்ட அறிவிப்பில்,‘இந்தியாவில் தொடர் தாக்குதல்கள் நடத்த தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள், அமெரிக்க தூதரகங்கள், அலுவலகங்களை தாக்கும் வகையில் இந்த தாக்குதல்கள் அமையலாம். குண்டு வெடிப்பு மட்டுமின்றி ஆட்கடத்தில், ராக்கெட் தாக்குதல்கள் உட்பட எந்த வகையான தாக்குதல்களிலும் தீவிரவாதிகள் ஈடுபடலாம். இதை தடுக்க இந்தியா இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. நாட்டின் சுதந்திர தினம் நடக்க உள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை மிகவும் முக்கியத்துவம் கொண்டதாக கருதப்படுகிறது. சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறையும் எச்சரித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.,டெல்லி செங்கோட்டையில் நாளை காலை 7 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார். . விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி, டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கில் துணை ராணுவத்தினரும், உள்ளூர் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.செங்கோட்டையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் (சிசிடிவி) பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர, தீவிரவாதிகளை கண்டதும் சுடுவதற்காக தேசிய கமாண்டோ படை வீரர்களும் செங்கோட்டையின் உயர்ந்த கட்டிடங்களில் நிறுத்தப்படவுள்ளனர்.இதுதவிர, விரைவு அதிரடிப்படையினர், சிறப்பு அதிரடிப்படையினர், கலவரத் தடுப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.பிரதமர் மற்றும் தலைவர்கள் உரையாற்றும்போது வானில் ஹெலிகாப்டர்களில் சுற்றியபடிஅதிரடிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.நாடாளுமன்ற வளாகம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், வெளிமாநில பஸ் நிலையங்கள் ஆகியவற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக டெல்லியின் எல்லைகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.தமிழகத்திலும் உஷார்: தமிழகத்தில் சில நாளாகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை என்றாலும், முக்கிய மாவட்டங்களிலும், கடலோர பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி எந்த அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருக்கவே கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment