Islamic Widget

August 14, 2010

லாரி கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே லாரி கவிழ்ந்து மூன்று பேர் படுகாயமடைந்தனர்.சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரம் அடுத்த பெரியகுப்பம் நாகார்ஜூனா ஆயில் கம்பெனி கட்டுமான பணிக்கு நேற்று லாரியுடன் கூடிய மிக்சர் மிஷின் சென்றது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் எம்.ஜி.ஆர்., சிலை அருகே வளைவில் நின்றிருந்த பஸ்சை சைடு வாங்கும் போது திடீரென லாரி கவிந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் விஜயகுமார், கிளீனர் சந்திரசேகர், அய்யப்பன் ஆகியோர் லாரியில் சிக்கிக் கொண்டனர். இதில் மூவரும் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள், அவர்களை லாரி கண்ணாடியை உடைத்து காப்பாற்றி அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

நன்றி தினமலர்

No comments:

Post a Comment