August 14, 2010
கல்வி அதிகாரியை வரவேற்க வெயிலில் காத்திருந்த மாணவியர்
பரங்கிப்பேட்டை,: முதன்மைக் கல்வி அதிகாரியை வரவேற்பதற்காக, மாணவியர் கடும் வெயிலில் காத்திருந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சாமியார்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 10 மற் றும் பிளஸ் 2 பொதுத் தேர் வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நாகார்ஜுனா பவுண்டேஷன் சார்பில் நேற்று பரிசு வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. மாணவியருக்கு பரிசு வழங்கி பாராட்டுவதற்காக, மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி அழைக்கப் பட்டிருந்தார்.காலை 10 மணிக்கு வருவதாக இருந்த அவரை வரவேற்க மாணவியர், பள்ளி நுழைவாயிலில் வரிசையாக நிறுத்தப்பட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலணி கூட அணியாமல் நிற்க வைக்கப்பட்டிருந்தனர். சுடுமணலில் நிற்க முடியாமல் மாணவியர் அவதிக்குள்ளாயினர்.ஒரு வழியாக 11 மணிக்கு வந்த முதன்மைக் கல்வி அதிகாரியை வரவேற்ற பின், "சீட்'டில் உட் காரச் செல்ல முயன்ற மாணவியரிடம், விழா முடியும் வரை நிற்க வேண் டும் என ஆசிரியர்கள் கட் டளையிட்டனர். மர நிழலில் நின்று ஓய்வெடுத்த பின், மீண்டும் 12 மணிக்கு விழா முடியும் வரை நிற்க முடியாமல் அவதியுடன் மாணவியர் நின்றிருந்தது பரிதாபமாக இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
- என்ன செய்தார் எம்.எல்.ஏ. செல்வி ராமஜெயம் ?
- மகனை வைத்து பின்லேடனைப் பிடிக்க புஷ் போட்ட திட்டம்!
- சவூதி: "சினிமா தேவை" என்கிறார் உயர் அதிகாரி
- இடைமறித்து எதிரி ஏவுகணைகளை தாக்கும் இந்தி ஏவுகணைச் சோதனை வெற்றி
- முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது
- விஷ வண்டுகளை அழிக்க பரங்கிப்பேட்டை தீயணைப்பு படையினர் தயக்கம்
- மோடியின் உண்ணாவிரதத்தில் போலீசார் தடியடி!
- உதவி தொகை வழங்கும் விழா
- விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் ரூ. 21 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்
- எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல – திக்விஜய் சிங்
No comments:
Post a Comment