Islamic Widget

August 13, 2010

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: 2 நாளில் ரூ.200 அதிகரித்தது


கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. இந்த நிலையில் தற் போது விலை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.13 ஆயிரத்து 616 ஆக இருந்தது.

நேற்று காலை பவுனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.13 ஆயி ரத்து 736 ஆக இருந்தது. மாலையில் பவுனுக்கு ரூ.32 குறைந்து ரூ.13 ஆயிரத்து 704 ஆக விற்றது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.112 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ.13 ஆயிரத்து 816 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.1727 ஆக விற்கிறது.

2 நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. குறைந்த விலைக்கு விற்ற தங்கம் அதே வேகத்தில் மீண்டும் விலை உயர்ந்து வருவது பொதுமக்களை கவலை அடைய செய்துள்ளது.

வெள்ளி ஒரு கிலோ ரூ.29 ஆயிரத்து 730 ஆகவும், ஒரு கிராம் ரூ.31.20 ஆகவும் உள்ளது.

No comments:

Post a Comment