Islamic Widget

August 24, 2010

வெள்ளத்தில் மிதக்கிறது டெல்லி

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateபுதுடெல்லி : டெல்லியில் 5வது நாளாக நேற்றும் தொடர்ந்து மழை கொட்டியதால், பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. யமுனை ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியுள்ளது. அலுவலகம் செல்லும் ஊழியர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியரும் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
டெல்லியில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலையிலேயே மழை பெய்யத் தொடங்கியது. அதனால், வேலைக்குச் செல்பவர்களும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. குறிப்பாக, ஐ.டி.ஓ., விகாஸ் மார்க், கன்னாட்பிளேஸ், எய்ம்ஸ் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் பலர் தங்களது கார் மற்றும் பைக்குகளை அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, ரயிலைப் பிடித்து அலுவலகத்துக்கு சென்றனர்.

நேற்று முன்தினம் காலை 8.30 மணியிலிருந்து நேற்று காலை 8.30 மணி வரையில் 6.5 மி.மீ. மழை டெல்லியில் பெய்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. “அடுத்த 24 மணி நேரமும் டெல்லியில் வானம் மேக மூட்டமாக காணப்படுவதோடு லேசான தூறலும் இருக்கும். அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்’’ என்று முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

யமுனையில் வெள்ளம்: டெல்லி, உ.பி.யில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, யமுனை ஆற்றில் அபாய அளவான 204.83 மீட்டரை கடந்து, நேற்று 205.19 மீட்டரை எட்டி தண்ணீர் ஓடுகிறது. அபாய அளவைவிட 36 செ.மீ. உயரத்துக்கு நீரின் அளவு யமுனையில் உயர்ந்துள்ளதால் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, அரியானா மாநிலத்தில் உள்ள அணை நிரம்பியதால், வினாடிக்கு 3.5 லட்சம் கனஅடி தண்ணீரை அம்மாநில அரசு திறந்து விட்டுள்ளது. அந்த தண்ணீர் டெல்லியை விரைவில் வந்தடையும் என்பதால், யமுனை ஆற்றின் கரையில் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், கரையோரங்களில் வசிப்பவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்காக, யமுனை ஆற்றின் கரைப் பகுதிகளில் 20 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment